அன்புள்ள ரஜினிகாந்த் முதல் அண்ணாத்த வரை.. தீபாவளி பரிசும் காத்திருக்கிறது.. மீனா பிறந்தநாள் ஸ்பெஷல்!

சென்னை: தென்னிந்திய சினிமாவில் இன்றும் முன்னணி கதாநாயகியாக கலக்கி வரும் நடிகை மீனா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

பிறந்தநாள் விழா ஒன்றில் குழந்தை மீனாவை பார்த்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 1982ம் ஆண்டு வெளியான தனது நெஞ்சங்கள் படத்தில் அவரை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினர்.

தொடர்ந்து சிவாஜியில் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா ரஜினிகாந்த் படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ஜோடி

சூப்பர் ஸ்டார் ஜோடி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா அவருக்கே ஜோடியாகவும் பல படங்களில் நடித்துள்ளார். வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ள அண்ணாத்த படத்திலும் நடிகை மீனா ரஜினி உடன் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இன்று பிறந்தநாள் காணும் நடிகை மீனா ரஜினி படங்களில் நடித்தது குறித்து இங்கே காண்போம்.

ரஜினியின் மகளாக

ரஜினியின் மகளாக

சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் படம் ரிலீசான அதே 1982ம் ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் எங்கேயோ கேட்ட குரல் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு மகளாக நடித்திருப்பார் நடிகை மீனா. 1984ம் ஆண்டு வெளியான அன்புள்ள ரஜினிகாந்த் படத்திற்கு முன்பாக பல படங்களில் பேபி மீனாவாக நடித்து அசத்தி உள்ளார்.

அன்புள்ள ரஜினிகாந்த்

அன்புள்ள ரஜினிகாந்த்

இயக்குநர் நட்ராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், அம்பிகா நடிப்பில் வெளியான அன்புள்ள ரஜினிகாந்த் படம் நடிகை மீனாவுக்கு மிகப்பெரிய பாதையை தமிழ் சினிமாவில் போட்டுத் தந்தது என்றே சொல்லலாம். அந்தளவுக்கு அந்த வயதிலேயே அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய மீனாவுக்கு தமிழ் சினிமாவில் பிரகாசமான எதிர்காலம் பிறக்க ஆரம்பித்து விட்டது.

எஜமான்

எஜமான்

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக கலக்கிய நடிகை மீனா 1990ம் ஆண்டு தமிழில் வெளியான ஒரு புதிய கதை படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். 1993ம் ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் எஜமான் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அப்போதே ஏகப்பட்ட விமர்சனங்கள் வெளியானாலும் படம் வேற லெவல் ஹிட் அடிக்க தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஹீரோயினாக மீனாவையே தேர்வு செய்தார் ரஜினிகாந்த்.

ஹிட் ஹீரோயின்

ஹிட் ஹீரோயின்

எஜமான் படம் வெற்றியடைந்த நிலையில், ரஜினி நடிப்பில் அடுத்த ஆண்டே வெளியான வீரா படத்திலும் நடிகை மீனா ஜோடியாக நடித்திருந்தார். அந்த படத்தில் ரோஜாவும் இன்னொரு ஹீரோயினாக நடித்திருந்தார். வீரா படத்தை தொடர்ந்து ரஜினி நடிப்பில் அடுத்ததாக வெளியான முத்து படத்திலும் ஹிட் ஹீரோயினான மீனாவே ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ஆண்டுக்கு பத்து படங்கள்

ஆண்டுக்கு பத்து படங்கள்

முத்து வெளியான 1995ம் ஆண்டு மட்டும் மீனா நடிப்பில் 10 படங்கள் வெளியாகின. ரஜினிகாந்த் மட்டுமின்றி கமல்ஹாசன், விஜயகாந்த், மோகன்லால், சத்யராஜ், சரத்குமார், கார்த்தி என ஏகப்பட்ட முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடிக்க ஆரம்பித்தார் மீனா.

மாறிய ஜோடி

மாறிய ஜோடி

முத்து திரைப்படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக மீனா நடிக்கவில்லை. பல ஆண்டுகள் கழித்து கடந்த 2008ம் ஆண்டு வெளியான குசேலன் படத்தில் ரஜினியுடன் மீண்டும் இணைந்து நடித்தார் மீனா. ஆனால், அந்த படத்தில் நம்ம ரங்கன் வாத்தியார் பசுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் மீனா.

தீபாவளி பரிசு காத்திருக்கிறது

தீபாவளி பரிசு காத்திருக்கிறது

விஜய், அஜித் உள்ளிட்ட நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ள மீனா இந்த ஆண்டு மோகன் லால் நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் 2 படத்திலுக்கும் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். குசேலன் படத்திற்கு பிறகு மீண்டும் ரஜினி உடன் மீனா அண்ணாத்த படத்தில் இணைந்து நடித்துள்ள நிலையில், ரசிகர்களுக்கு நிச்சயம் தீபாவளி பரிசு காத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். பிறந்த நாள் வாழ்த்துக்கள் மீனா!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X