»   »  தயாரிப்பாளராகும் அனீஸ் ஜீவா

தயாரிப்பாளராகும் அனீஸ் ஜீவா

Subscribe to Oneindia Tamil


மறைந்த இயக்குநர், ஒளிப்பதிவாளர் ஜீவாவின் மனைவி அனீஸ், விரைவில் தயாரிப்பாளராகிறார். ஜீவா விட்டுச் சென்ற நல்ல சினிமாவை தான் தொடர்ந்து தயாரித்து தமிழ் ரசிகர்களுக்குக் கொடுக்கப் போவதாக கூறியுள்ளார்.

Click here for more images

ஒளிப்பதில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி, ரசிகர்களை கவர்ந்த ஜீவா, இயக்குநராகவும் வெற்றி பெற்றவர். 12பி அவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. தொடர்ந்து உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களுக்கு வித்தியாசமான படங்களைக் கொடுத்தார்.

இந்த நிலையில் ஜெயம் ரவியை வைத்து இயக்கி வந்த தாம் தூம் படத்தின் ஷூட்டிங்குக்காக ரஷ்யா சென்றிருந்த இடத்தில் எதிர்பாராதவிதமாக மரணமடைந்தார் ஜீவா.

தற்போது தாம் தூம் படத்தின் மிச்சப் பகுதிகளை ஜீவாவின் மனைவி அனீஸே இயக்கி முடிக்கவுள்ளார். ஆனால் படத்தின் 95 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதால் இது நிச்சயமாக ஜீவா படமாகவே இருக்கும். மீதக் காட்சிகளையும் கூட அவர் நினைத்தது போலவே படமாக்குவேன் என்று அனீஸ் கூறியுள்ளார்.

இந்தப் படத்தை முடித்து விட்டு சினிமாவில் தீவிரமாக இறங்கவுள்ளார் அனீஸ். அதாவது தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கப் போகிறார் அனீஸ். தனது நிறுவனத்துக்கு விஷன் திவா ஸ்டுடியோஸ் என்று பெயரிட்டுள்ளார்.

இந்த நிறுவனத்தின் மூலம் நல்ல படங்களைத் தயாரித்து வழங்கப் போவதாக கூறியுள்ளார். ஜீவாவின் கனவுகள் அனைத்தையும் இந்த நிறுவனத்தின் படங்கள் மூலம் நனவாக்கப் போவதாகவும் அனீஸ் கூறியுள்ளார்.

கையில் தற்போது சில கதைகளையும் அனீஸ் வைத்துள்ளாராம். இந்தக் கதைகளை ஜீவா உயிருடன் இருந்தபோது அவருடன் விவாதித்தவையாம். இவற்றை அனீஸே இயக்கவுள்ளாராம்.

ஆல் தி பெஸ்ட் அனீஸ்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil