For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஸ்பெஷல்ஸ்

  By Staff
  |
  அங்கீதா படு உற்சாகமாகமாக, செம சந்தோஷமாக உள்ளார். பின்னே, புதுகதாநாயகியாக இருந்தாலும், தொடர்ந்து 2 படங்கள் அடுத்தடுத்துவெளியாகினால் சந்தோஷமாக இருக்காதா, என்ன?

  முதல் படமான "லண்டன் பரவாயில்லை ரகமாக ஓடி விட்டது. இப்போது "தகதிமிதா குஜாலாக ஓடிக் கொண்டிருக்கிறது. இரண்டிலும்காமெடிதான் டாப் என்றாலும் அங்கீதாவும் ரசிகர்களால் பார்க்கப்பட்டார், ரசிக்கப்பட்டார் என்பதை மறுக்க டியாது.

  சரி, அங்கீதாவை கொஞ்சம் கலாய்த்து பார்ப்போமா?

  லண்டன் அனுபவத்தை அவரிடம் கேட்டபோது, " அய்யோ, அதை ஏன் கேக்கறீங்க. நாங்க போனப்ப ரொம்பக் குளிர். கழுத்து முதல் பாதம் வரைதுணியால் மூடித்தான் வெளியே நடக்கவே முடியும். ஆனால் எனது நிலைமைதான் படு மோசமாகி விட்டது.

  கதாநாயகி என்பதால் பாடல் காட்சிகளில் படு சிக்கனமான உடையைக் கொடுத்து விட்டார்கள். சின்னதாக ஒரு அரை டிராயர், அதை விடக்குட்டியாக ஒரு மேலுடை, இதுதான் எனக்கு காஸ்ட்யூம்.

  ஆனால் ஹீரோ பிரஷாந்தோ, கோட் சூட்டுடன் படு அமர்க்களமாக இருந்தார்.

  எனக்கு பொறாமையாக இருந்தது. நடுங்கும் குளிரில் இப்படி நம்மை மாட்டி விட்டு விட்டீர்களே என்று இயக்குநர் சுந்தர்.சி.யிடம் புலம்பிக் கொண்டேநடித்து முடித்தேன்.

  பாடல் காட்சி என்பதால் ஆடிப்பாடும்போது குளிர் தெரியாது. ஆனால் ஆடி முடித்ததும், உள்ளுக்குள் நரம்பு சிலிர்க்குமே பார்க்கணும், அய்யோ,மறக்கவே முடியாத அனுபவம் அது.

  அது சரி அங்கீதா, தொடர்ந்து சுந்தர்.சி.யின் ரெண்டு படங்களில் நடித்து விட்டீர்களே, என்ன விசேஷம்?

  அதெல்லாம் விசேஷம் எதுவும் கிடையாது. லண்டன் படத்தில் நடித்தபோது, "தகதிமிதா கதையை என்னிடம் கூறினார் சுந்தர்.சி.சார். எனக்குப் பிடித்தமாதிரியான கதை என்பதால் உடனே ஒத்துக் கொண்டு விட்டேன்.

  இரண்டு படங்களுமே படு வித்தியாசமான ஸ்டோரி என்பதால் கிளிக் ஆகி விட்டன. நானும் பேசப்படுகிறேன். தட்ஸ் ஆல்! அங்கீதா சிரித்தாலும்அழகுதான்!

  தெலுங்குப் படத்தில் நடித்தபோது ஷூட்டிங் ஸ்பாட்டில் சில்மிஷம் நடந்தது குறித்து பரபரப்பை ஏற்படுத்தினீர்களே, இப்போது எப்படி?

  அது முடிந்து விட்ட விஷயம். அந்த ஹீரோவைப் பற்றி பெரிய அளவில் பத்திரிக்கையாளர்களிடம் பேசலாம் என்றுதான் இருந்தேன். ஆனால்தயாரிப்பாளர்தான் விட்டு விடு என்று கூறித் தடுத்து விட்டார்.

  சில ஹீரோக்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். அவர்களால் பெரிய ஆளாக வர முடியாது என்பதுதான் உண்மை. ஆனால் அவர்கள் செய்யும் பந்தா,அலட்டல் இருக்கே, அதைத்தான் தாங்க முடியாது.

  நல்ல ஹீரோக்கள் மத்தியில் இப்படிப்பட்ட காளான் ஹீரோக்களும் இருக்கிறார்கள். இவர்களிடம் நடிகைகள்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நாம் சரியாக இருந்து விட்டால், இந்த ஜீரோக்களால் ஒன்றும் வாலாட்ட முடியாது.

  தமிழில் பிரஷாந்த் ரொம்ப டீசன்ட்டான ஹீரோ. உண்மையான ஜென்டில்மேன். அவருக்கு நிறைய விஷயங்கள் தெரிந்திருக்கிறது. நிறைய சொல்லிக்கொடுக்கிறார். புதுமுகமாச்சே என்று என்னிடம் பிகு காட்டாமல் படு இயல்பாக பழகினார். ஐ வாஸ் சோ லக்கி!

  சரி, சரி, பிரஷாந்த் புகழாரம் போதும், கவர்ச்சி ரொம்ப காட்றேளே?

  அதில் தப்பே இல்லை சார், அசிங்கமான அளவுக்கு கவர்ச்சி காட்டக் கூடாது. அழகுடன் கவர்ச்சி இருந்தால் அதில் என்ன தப்பு? நாம் எல்லோரும்நம்மை அழகுபடுத்திக் கொள்வதில்லையா?

  அழகாக நம்மை காட்டிக் கொள்வதை விரும்புவதில்லையா? அதை ஏன் கவர்ச்சி என்று கூறி கொச்சைப்படுத்த வேண்டும்?

  அங்கீதா பேசினாலும் அழகுதான்!

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X