»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினியின் சந்திரமுகி, கமல்ஹாசனின் மும்பை எக்ஸ்பிரஸ் என பெரிய படங்கள் நல்ல தியேட்டர்களைப் பிடித்துவிட்டதால், ஷங்கர்இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள அந்நியன் படத்திற்கு சரியான தியேட்டர்கள் கிடைக்கவில்லையாம். இதனால் பட ரிலீஸை மே மாதத்திற்குதள்ளி வைத்து விட்டார் ஷங்கர்.

ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டமான படம் அந்நியன். படு வித்தியாசமான ரோலில் விக்ரம் நடிக்கிறார். அவருக்குஜோடியாக சதா. படத்தின் கதை குறித்தும், விக்ரமின் கேரக்டர் குறித்து படு மர்மமாக இருக்கும் ஷங்கர், ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டுதினத்தன்று படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தார்.

பட வேலைகளும் ஓரளவுக்கு முடிந்து விட்டன. இன்னும் கொஞ்சம் வேலைகளே பாக்கி. அதுவும் கூட விரைவில் முடிந்து விடும்.இருந்தாலும், ஏப்ரல் 14க்குப் பதில் மே 15ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய ஷங்கர் முடிவு செய்துள்ளாராம்.

இதற்கு முக்கியக் காரணமாக கூறப்படுவது தமிழகத்தில் நல்ல தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்பதே.

ரஜினியின் சந்திரமுகியையும் கமலின் மும்பை எக்ஸ்பிரஸைம் வாங்க வினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் கடும்போட்டி நிலவுகிறது.

அனைத்து முக்கிய நகர்களிலும் உள்ள முன்னணி, டீசண்ட் திரையரங்கங்களின் உரிமையாளர்கள் இந்த இரு படங்களை திரையிடவே அதீதஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால் அந்நியனுக்கு ஏ கிரேடு திரையரங்குகள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாம். இதன் காரணமாக பட ரிலீஸை ஒருமாதத்திற்குத் தள்ளிப் போட முடிவு செய்துள்ளதாக ஷங்கர் தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால் கிட்ட நெருங்கிப் போய் விசாரித்தால், வேறு ஒரு காரணமும் சொல்கிறார்கள்.

நல்ல தியேட்டர்கள் கிடைக்காதது ஒரு காரணமாக இருந்தாலும் உண்மையான காரணம் ரஜினியின் சந்திரமுகில் தான் என்கிறார்கள்.

பாபாவுக்குப் பின் மிக எதிர்பார்ப்புடன் வரும் ரஜினியின் சந்திரமுகியோடு மோத வேண்டுமா என்று ஷங்கர் நினைக்கிறாராம். மேலும்அடுத்து கமலுடன் சேர்ந்து ஒரு படம் பண்ணும் முடிவில் இருக்கும் ஷங்கர், அவரது மும்பை எக்ஸ்பிரசுக்கு போட்டியை ஏற்படுத்துவதைத்தவிர்க்க விரும்புகிறாராம்.

கமலுக்கு இடையூறை தவிர்க்கவும், ரஜினி படத்துடன் மோதுவதை அவாய்ட் செய்யவும் தான் அந்நியனை கொஞ்சம் அந்தாண்ட தள்ளிவைத்து ரிலீஸ் செய்கிறார் ஷங்கர் என்கிறார்கள்.

சந்திரமுகி குறித்த கொசுறு: இந்தப் படம் ரூ. 30 கோடி அளவுக்கு பிசினஸ் ஆகியுள்ளதாம்.

மொத்தம் 600 பிரிண்ட் போடப் போகிறார்களாம். ஜப்பான், யுஎஸ், நியூசிலாந்து, மலேசியா என வெளி நாடுகளுக்கு அதிக பிரிண்டுகள்அனுப்பப் பட இருக்கின்றனவாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil