»   »  இந்தி ரீமேக்கில் ரஜினி?

இந்தி ரீமேக்கில் ரஜினி?

Subscribe to Oneindia Tamil
Click here for more images
இந்தியில் உருவாகியுள்ள 'ஹல்லா போல்' படத்தின் ரீமேக்கில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக புது செய்தி கிளம்பியுள்ளது.

சிவாஜிக்குப் பிறகு ரஜினிகாந்த்தின் அடுத்த படம் என்ன என்பது கோலிவுட்டின் பரபரப்பு எதிர்பார்ப்பாக உள்ளது. இதுகுறித்து பல்வேறு செய்திகள், பெரும்பாலும் வதந்திகள் உலவி வருகின்றன.

மணிரத்னம் படத்தில் நடிக்கப் போகிறார். கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கப் போகிறார். இளையராஜாவுடன் இணையப் போகிறார் என பலப் பலத் தகவல்கள் கோலிவுட்டை கலக்கிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் புதிதாக இன்னொரு வதந்தி கிளம்பியுள்ளது. அது இந்தியில் உருவாகியுள்ள, இன்னும் வெளிவராத ஹல்லா போல் என்ற இந்திப் படத்தில் ரஜினி நடிக்கப் போகிறார் என்ற செய்தி.

அஜய் தேவ்கன், வித்யா பாலன், சிறப்புத் தோற்றத்தில் ஸ்ரீதேவி, கரீனா கபூர் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம், பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஜெஸ்ஸிகா லால் கொலை வழக்கை அடிப்படையாகக் கொண்ட கதையாகும். இப்படத்தை பிரமீட் சாய்மீரா நிறுவனம் தமிழில் ரீமேக் செய்யத் திட்டமிட்டுள்ளது. இதில்தான் ரஜினி நடிக்கப் போவதாக பேச்சு கிளம்பியுள்ளது.

இதுகுறித்து ஹல்லா போல் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் சந்தோஷியிடம் கேட்டபோது, இதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது. மேலும் இப்படத்தை ரஜினி இன்னும் பார்க்கவே இல்லை என்றார்.

ஆனால் பிரமீட் தரப்பில் விசாரித்தபோது, ரஜினியுடன் இதுதொடர்பாக பேச்சு நடந்து வருவதாக கூறப்பட்டது.

ரஜினியின் அடுத்த பட அறிவிப்பு வரும் வரை இதுபோல இன்னும் பல தகவல்கள் வெளியாகலாம்.

Read more about: rajini
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil