»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டையில் இருந்து சரவணன் படத்தில் அபர்ணாவுக்கு லிப்-டு-லிப் கிஸ் கொடுத்துள்ளார் தனுஷ்.

பார்க்க அடக்க ஒடுக்கமாய் இருந்தாலும் அபர்ணாவும் நல்ல கம்பெனி கொடுத்ததோடு, கவர்ச்சியில் புகுந்து ஜாம்..ஜாம் என்று விளையாடியிருக்கிறராம்.

காட்சியை டைரக்டர் விளளக்கியதும் தனுஷை விட அதிக உற்சாகமாய் குதித்து ரெடியானதோடு தனுஷோடுஇதழோடு இதழ் சேர்த்திருக்கிறார் அபர்ணா. தனுஷும் சும்மா இல்லை. அபர்ணாவின் உதட்டை குத்தகைக்குஎடுத்துவிட்ட மாதிரி வைத்த வாயை எடுக்காமல் நின்றிருந்தாராம்.

கமல்ஹாசனுக்குப் பின் இப்படி வாயோடு வாய் சேர்த்த முதல் தமிழ் ஹீரோ தனுஷ் தான் என்கிறார்கள்.

இது தவிர படத்தில் ஏகத்துக்கும் வீர, தீர, ஈர விளையாட்டுக்களாம். இருவரும் நீரில் குதித்து உருண்டு புரண்டுநடித்து பாடல் காட்சிகளுக்கு மெருகு ஏற்றியிருக்கிறார்களாம். சென்னைப் பெண்ணான அபர்ணா இந்த அளவுக்குதுணிவார் என்று முதலில் டைரக்டர் எதிர்பார்க்கவில்லையாம்.


ஆனால், சூட்டிங் ஸ்பாட்டில் தனுஷுடன் படு லூட்டி அடித்ததோடு, அவருடன் படு நெருக்கம் காட்டுவதிலும்தனக்கு எந்தவித தயக்குமும் இல்லை என்பதை அபர்ணா சொல்லாமல் சொன்னதால், தைரியமாய் அவரிடம்வேலை வாங்கிவிட்டார்களாம்.

பொங்கலுக்கு வரப் போகும் இந்தப் படமும் வென்றால் தொடர்ந்து 4 ஹிட் கொடுத்தவர்கள் பட்டியலில்சேர்ந்துவிடுவார் தனுஷ்.

இதற்கிடையே அவரது திருடா திருடி படம் நூறாவது நாளைக் கடந்து தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்துக்குஏதத்துக்கும் லாபத்தை அள்ளித் தந்துள்ளதாம். இந்தப் படத்தின் பாடல் உரிமையை வாங்கி சிடி, கேசட்கள்வெளியிட்ட ரோஜா கம்பைன்ஸ் நிறுவனத்துக்கும் ஏகப்பட்ட கோடிகள் தேறிவிட்டனவாம்.


நன்றிக் கடன்கள்

தனுஷின் தந்தையான கஸ்தூரி ராஜாவை ராஜ்கிரணிடம் சேர்த்துவிட்டு சினிமாவில் வாழ்வு தந்தவர் இசைஞானிஇளையராஜா என்பது எல்லோருக்கும் தெரியும். இப்போது ஒரு படம் எடுக்க முடிவு செய்து தனுஷின் கால்ஷீட்டைஇளையராஜா கேட்க உடனே அதைக் கொடுத்து நன்றிக் கடன் தீர்த்தாராம் கஸ்தூரி ராஜா.

இளையராஜாவை சினிமாவில் அறிமுகப்படுத்திய பஞ்சு அருணாச்சலமும் தனுஷின் கால்ஷீட் கேட்டு அலைந்தார்.இதை அறிந்த இளையராஜா தனுஷிடம் வாங்கிய கால்ஷீட்டை அவரிடம் தந்து தனது நன்றிக் கடனைக்காட்டினாராம்.

பஞ்சு சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டதால் இந்தப் படம் மிக பிரம்மாண்டமான தயாரிப்பாகவெளியாகவுள்ளதாம்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil