twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான் யுவன் சங்கர் ராஜாவின் பெரிய ரசிகன். சொன்னது ஏ.ஆர்.ரகுமான்... என்ன காரணம் தெரியுமா?

    |

    சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் இரவின் நிழல், கோப்ரா படங்கள் சமீபத்தில் வெளியானது. நேற்று வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரிலீஸ் ஆனது.

    அடுத்ததாக பொன்னியின் செல்வன், மாமன்னன் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகவிருக்கிறது.

    இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் மிகப் பெரிய ரசிகன் நான் என்று ரகுமான் முன்னதாக ஒரு நிகழ்ச்சியில் கூறியது தற்சமயம் வைரலாகியுள்ளது.

    ரஜினிக்கு எப்படி அந்த மூன்றெழுத்தோ அதேபோல சிம்புவிற்கு இந்த மூன்றெழுத்து... டி.ராஜேந்தர் பெருமிதம்!ரஜினிக்கு எப்படி அந்த மூன்றெழுத்தோ அதேபோல சிம்புவிற்கு இந்த மூன்றெழுத்து... டி.ராஜேந்தர் பெருமிதம்!

    ரகுமான் யுவன் கணெக்ட்

    ரகுமான் யுவன் கணெக்ட்

    இசைஞானி இளையராஜாவிடம் கீபோர்ட் பிளேயராக ரகுமான் பணியாற்றியபோதுதான் யுவனை முதன் முதலில் பார்த்திருக்கிறார் ரகுமான். அப்போது ரஹ்மானுக்கு 16 வயதும் யுவனு 7 வயதும் இருந்ததாம்.

    பாதை மாறிய யுவன்

    பாதை மாறிய யுவன்

    சிறுவயதிலிருந்தே பைலட் ஆகவேண்டும் என்பதுதான் யுவனின் கனவாக இருந்துள்ளது. ஆனால் பள்ளியில் படிக்கும்போது எப்போதெல்லாம் இளையராஜாவின் பாடல்கள் வருகிறதோ அப்போதெல்லாம் யுவனைச் சுற்றி ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்குமாம். அதனால் ஒரு ஸ்டார் கிட் என்ற அந்தஸ்துடன் பள்ளியில் வலம் வந்திருக்கிறார். அப்படிப்பட்ட தருணத்தில் ரகுமான் அறிமுகமாகி ஒவ்வொரு படத்திலும் வளர்ச்சி அடைந்தபோது யுவனுக்கு பள்ளியில் இருந்த கிரேஸ் சற்று குறைய ஆரம்பித்துவிட்டதாம்.

    கடுப்பேற்றிய உறவினர்

    கடுப்பேற்றிய உறவினர்

    அந்தச் சமயத்தில் தன்னுடைய உறவினர் ஒருவரே யுவனிடம், இனிமேல் உனது அப்பாவின் ராஜ்ஜியம் கிடையாது ரகுமானின் ராஜ்ஜியம்தான் என்று கூறி வெறுப்பேற்றியுள்ளார். அன்றுதான் தான் பைலட் ஆக வேண்டுமா அல்லது இசையில் சாதிக்க வேண்டுமா என்ற முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும் முடிவில் இசைத் துறையை தேர்ந்தெடுத்ததாகவும் ரகுமானுடன் போட்டி போட வேண்டும் என்பதற்காகத்தான் அவர் இசையமைப்பாளர் ஆனார் என்றும் சமீபத்திய பேட்டியில் யுவன் கூறியிருப்பார்.

    ரசிகனான ரகுமான்

    ரசிகனான ரகுமான்

    யுவன் மீது ரகுமானுக்கு எப்போதுமே தனி பாசம் உண்டு. உங்களுக்கு அடுத்தபடியாக எந்த இசையமைப்பாளரை ஆஸ்கார் விருது வாங்க தகுதியானவர் என்று ஒரு முறை கேட்டபோது யுவன் என்று கூறியிருப்பார். மரியான் படத்தில் தன்னுடைய இசையில் யுவனை பாடவும் வைத்திருப்பார். முதலில் அந்தப் பாடலை ரஹ்மானையே பாடச் சொன்னாராம் இயக்குநர் பரத் பாலா. ஆனால் என்னை விட யுவன் பாடினால் நன்றாக இருக்கும் என்று கூறி அவரை பாட வைத்துள்ளார். அந்தப் பாடலுக்காக சிறந்த பாடகருக்கான விருது யுவன் சங்கர் ராஜாவிற்கு ஒரு நிகழ்ச்சியில் கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் அதனை வழங்கியதும் ரகுமான்தான். அப்போது யுவன் குரலில் ஒரு ஈரம் இருக்கும், அதுதான் என்னை கவர்ந்தது, நான் யுவனின் குரலுக்கு மிகப்பெரிய ரசிகன் என்று ஏ.ஆர்.ரகுமான் கூறியிருப்பார்.

    English summary
    AR Rahman Said I am a Big Fan of Yuvan Shankar Raja, Do you Know the Reason?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X