»   »  நயன் பிறந்த நாள் ஸ்பெஷல்... அறம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

நயன் பிறந்த நாள் ஸ்பெஷல்... அறம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வழக்கமாக டாப் ஹீரோக்களின் பிறந்தநாளன்று தான் படங்களின் தலைப்பு, டீசர், டிரெய்லர், பாடல்கள் என வெளியிடுவார்கள்.

ஆனால் முதல்முறையாக அந்த கவுரவம் ஒரு ஹீரோயினுக்குக் கிடைத்திருக்கிறது. அவர் நயன்தாரா.

இன்று நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி நேற்று வியாழன் நள்ளிரவே அவர் நடித்துள்ள படத்தின் தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டன.

Aramm firstl look... Nayanthara's birthday special

மீஞ்சுர் கோபி எனும் கோபி நயினார் இயக்கும் இந்தப் படத்துக்கு அறம் என்று தலைப்பிட்டுள்ளனர். கதாநாயகியை மையக்கதாபாத்திரமாகக் கொண்டுள்ள இப்படத்தின் விளம்பரங்கள் இன்று நாளிதழ்களில் பிரதான இடம் பிடித்துள்ளன.

இந்தப் படத்தில் ஒரு நேர்மையான மாவட்ட ஆட்சியர் வேடத்தில் நடிக்கிறாராம் நயன்தாரா.

ராமநாதபுரம் மாவட்டப் பின்னணியை களமாக கொண்ட இப்படத்துக்காக, அவ்வப்போது அங்கேயே தங்கி படப்பிடிப்பில் பங்கேற்று வந்தார் நயன்தாரா. படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. கே ஜெ ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். கோபி கிருஷ்ணா படத்தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

யார் இந்த மீஞ்சூர் கோபி என்று கேட்பவர்களுக்கு...

விஜய் நடித்த கத்தி படத்தின் கதை தன்னுடையது என்று கோரி கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்ததோடு, மீடியாக்களிலும் நியாயம் கேட்டவர் இந்த கோபி நயினார்.

English summary
Nayantharaa's Aramm movie first look was released Today as her birthday special.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil