»   »  நிலா-அர்ஜூன் பாடலுக்கு எதிர்ப்பு

நிலா-அர்ஜூன் பாடலுக்கு எதிர்ப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

நிலா-அர்ஜூன் நடிப்பில் உருவான மருதமலை படத்தில் பக்தி பாடல் மெட்டில் அதி ஆபாசமாக குத்து பாட்டு வைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கோலிவுட்டில் கற்பனை சரக்கு தீர்ந்துவிட்டது போலும். இதனால் பழைய திரைப் படங்களிலிருந்து பிரபல பாடல்களை சுட்டு, ரீமிக்ஸ் செய்து பிழைப்பு ஓட்டுவது நடக்கிறது.

இப்படிப்பட்ட பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைப்பதாக சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், வரவேற்பு இருக்கிறதோ இல்லையோ இந்தப் பாடல்கள் ஏற்படுத்தும் சர்ச்சைகள் கொஞ்ச நஞ்சமல்ல.

சமீபத்தில் விஷால்-பானு நடித்த தாமிரபரணி படத்தில் கற்பூர நாயகியே கனகவல்லி என்ற பாடலை ரீமிக்ஸ் செய்து காதல் பாடலாக மாற்றப்பட்டது. இதில் ஆபாசம் இல்லையென்றாலும், கடவுள் பக்தி பாடலை டூயட் பாடலாக மாற்றியதற்கு பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்ப்பை தெரிவித்தன.

இந்த பிரச்சனை ஓய்ந்து கொண்டுள்ள நிலையில் அர்ஜூன் ஒரு கேவலமாக செயலை செய்துள்ளார். ஜெய்ஹிந்த் படத்தை தயாரித்து நடித்தாலும் நடித்தார். அதிலிருந்து இவருக்கு, தான் ஒரு சுதந்திர போராட்ட தியாகி என்ற நினைப்பே வந்து விட்டது.

குறைந்தபட்சம் 3 ஹீேராயின்களுடன் போய் தீவிரவாதிகளைப் பிடித்துக் கொண்டே டூடூடூயட் (3 பேராச்சே) பாடுவார்.

இப்போது தான் நடித்த மருதமலை படத்தில், பக்தி பாடலான மருதமலை மாமனியே முருகய்யா என்ற பாடலுக்கு நிலாவோடு சேர்ந்து பயங்கர குத்தாட்டம் போட்டுள்ளார்.

அர்ஜூனின் இந்த குத்தாட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பாஜக, இந்து, சிவசேனா ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இது குறித்து பாஜக பிரமுகர் ஒருவர் கூறுகையில், பழைய பிரபல பாடல்களை ரீமிக்ஸ் செய்கிறார்கள். அட, என்ன வேண்டுமானாலும் செய்து விட்டுப் போங்கள். அத பற்றி கவலையில்லை.

ஆனால், கற்பூர நாயகியே கனகவல்லி, மருதமலை மாமனியே முருகையா, குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் போன்ற பக்தி பாடல்களைக் கூடவா ரீமிக்ஸ் செய்ய வேண்டும்.

ரீமிக்ஸ் செய்து அதன்மூலம் நல்ல கருத்தையாவது சொல்கிறீர்களா. அதுவும் இல்லை. கண்றாவி உடையில், குத்தாட்டம் ேபாட விடுகிறார்கள். இது போன்ற பாடல்களை ரீமிக்ஸ் செய்வதை தடை செய்ய வேண்டும் என்றார்.

திருச்சியில் பல இடங்களில் அர்ஜூனுக்கு எதிராக ஆர்பாட்டமே நடத்தப்பட்டிருக்கிறது.மிஸ்டர் அர்ஜூன் சர்ஜா (இது தான் அவரது முழுப் பெயர்), திருச்சி பக்கம் போயிறாதீங்க..

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil