»   »  நக்மா, கரீனாவுக்கு ஆபாசஅழைப்பு விடுத்தவர் கைது

நக்மா, கரீனாவுக்கு ஆபாசஅழைப்பு விடுத்தவர் கைது

Subscribe to Oneindia Tamil

நடிகைகள் நக்மா, இஷா கோபிகர் உள்ளிட்டோருக்கு தொலைபேசி மூலம் ஆபாசமாக பேசியும், ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியும் தொல்லை கொடுத்த ஹைதராபாத் நபரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.

நடிகைகள் நக்மா, இஷா கோபிகர், கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா, வித்யா பாலன், கங்கனா ரனவத் உள்ளிட்டோருக்கும், நடிகர்கள் சிலருக்கும் அடிக்கடி ஆபாச எஸ்.எம்.எஸ்.கள் வந்தவண்ணம் இருந்தன.

இதேபோல நடிகைகளுக்கு தொலைபேசியில் ஆபாசமாக பேசியும் தொல்லைகள் தொடர்ந்து வந்தன. இதுதொடர்பாக மும்பை போலீஸில் இந்தித் திரையுலகம் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து போலீஸார் களத்தில் குதித்தனர். யார் எஸ்.எம்.எஸ். அனுப்புவது, தொலைபேசியில் பேசுவது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

இதில், ஹைதராபாத்திலிருந்து இந்த அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.கள் வந்தது தெரிய வந்தது. இதையடுத்து சைபர் கிரைம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி மெஹ்ராஜ் என்பவரைப் பிடித்தனர்.

அவரிடம் விசாரணை நடத்தியபோது, சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகள் கேட்டுக் கொண்டதால்தான் இவ்வாறு அனுப்பியதாக குண்டைப் போட்டார் மெஹ்ராஜ். இதுகுறித்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் போலீஸார் சிறையில் அடைத்தனர். மெஹ்ராஜ் இவ்வாறு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்புவது புதிதில்லையாம். ஏற்கனவே கடந்த ஆண்டும் இதுபோல செய்து சிறைவாசம் அனுபவித்தவர் என்று ஹைதராபாத் போலீஸார், மும்பை போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil