For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  வித்யாசமாக இன்வெஸ்டிகஷன் செய்திருக்கும் அருண் விஜய்.. ரொமான்ஸ் பற்றி பேச மாட்டாராம்!

  |

  சென்னை: தியேட்டருக்கு சென்று படங்கள் பார்க்க முடியாதவர்கள் ஒடிடி தளத்தில் பார்க்கலாம். இதனால் சினிமாத்துறை வாழும் என்று நடிகர் அருண் விஜய் கூறியுள்ளார்.

  Recommended Video

  Arun Vijay| எப்பவும் அப்பா மூலம் எனக்கு வாய்ப்பு கிடைக்கல | *INTERVIEW

  ஏவிஎம் தயாரிப்பில் இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய், நடிகைகள் வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன் போன்ற பலர் நடிப்பில் உருவாகியுள்ள வெப் தொடர் தமிழ்ராக்கர்ஸ். இது சோனி லைவ் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. தற்போது இந்த வெப் தொடர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

  நடிகர் அருண் விஜய் நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

  Thiruchitrambalam Day 3 Box Office: வெற்றியை ருசித்த தனுஷ்.. வசூல் வேட்டையாடும் திருச்சிற்றம்பலம்! Thiruchitrambalam Day 3 Box Office: வெற்றியை ருசித்த தனுஷ்.. வசூல் வேட்டையாடும் திருச்சிற்றம்பலம்!

   சினிமாத்துறை சந்திக்கின்ற பிரச்சனைகள்

  சினிமாத்துறை சந்திக்கின்ற பிரச்சனைகள்

  கேள்வி: தமிழ் ராக்கர்ஸ் என்கிற இந்த வெப்சீரியஸ் நீங்கள் பண்ண என்ன காரணம்?

  பதில்: தமிழ்ராக்கர்ஸ் என்கின்ற இந்த கான்செப்ட் ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பது என்பது மகிழ்ச்சியான விஷயம். பைரசி என்பது தவறான விஷயம். அதில் திரைப்படங்கள் பார்ப்பதும் தவறான விஷயம் என்பதை இந்த தமிழ் ராக்கர்ஸ் வெப்சீரிசை பார்த்தபிறகு அனைவரும் உணருவார்கள். இந்த பைரசியால் தமிழ் சினிமா இன்டஸ்ட்ரி மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சினிமா இன்ட்ஸ்டரியும் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பதை வெளிப்படையாக வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறோம் என்பது எனக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை அளிக்கிறது என்றார்.

   தவறான விஷயம்

  தவறான விஷயம்

  கேள்வி: தமிழ் ராக்கர்ஸ் ரசிகர்களிடம் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

  பதில்: இந்த வெப்சீரிஸ் பார்த்தபிறகு, ஒவ்வொரு ரசிகனும் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ள முடியும். அதுவே அவர்களுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். ஒவ்வொருவரின் மனதிலும் பைரசி மூலம் படம் பார்க்கக்கூடாது, அது தவறான விஷயம் என்பதை உணர வைப்பது மட்டும் தான் எங்கள் குறிக்கோள். இந்த பைரசி நெட்ஒர்க் எவ்வாறு செயல்படுகிறது என்பதை படத்தில் நான் பணியாற்றும்போது தான் முழுவதுமாக தெரிந்து கொண்டேன். இது தொடர்பாக இயக்குநர் அறிவழகன், மிகவும் ஆராய்ச்சி செய்து படத்தை எடுத்துள்ளார்.

   30 நாளில் ஒடிடியில் புதுப்படம்

  30 நாளில் ஒடிடியில் புதுப்படம்

  கேள்வி: பைரசி எப்போது தடுக்கப்படும்?

  பதில்: பைரசியை தடுக்க வேண்டுமென்றால், அதையும் தாண்டி டெக்னாலஜியில் வளர்ச்சி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் பைரசி தொடர்பான சட்டங்கள் கடுமையாக்கப்படும் என்ற நம்பிக்கையும் உள்ளது. சினிமா என்பது ரசிகர்களை மகிழ்விப்பதற்காகவும், ரசிகர்கள் தங்களுடைய பிரச்னைகளை மறந்து சிரிக்க வேண்டும் என்பதற்காக பணத்தை போட்டு, எங்களுடைய கடுமையான உழைப்பையும் கொடுக்கிறோம். இது போன்று சினிமாவில் நல்ல விஷயங்கள் வர வேண்டும் என்றால் அது ரசிகன் நினைத்தால் மட்டுமே நடக்கும். ஒரு குடும்பத்தில் குழந்தைகள் தவறு செய்யும்பொழுது, நாம் தவறு என்று சுட்டிக் காட்டுவதுபோல், பைரசியில் படங்கள் பார்ப்பது தவறு என்பதை நாம் சுட்டிக்காட்ட வேண்டும் என்றார். மேலும் தற்போது ஒடிடி தளங்களில் 30 நாட்களில் படங்கள் வெளிவருகின்றன. தியேட்டருக்கு சென்று படங்கள் பார்க்க முடியாதவர்கள் ஒடிடி தளத்தில் பார்க்கலாம். இதனால் சினிமாவும் வாழும் என்றும் தெரிவித்தார்.

   காயங்கள் ஏற்படுவது சகஜம்

  காயங்கள் ஏற்படுவது சகஜம்

  கேள்வி: படப்பிடிப்பின்போது ஆக்ஷன் காட்சிகளில் உங்களுக்கு காயம் ஏற்படுவதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

  பதில்: தமிழ் ராக்கர்சில் வெப்சீரிசில் ருத்ரா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்த படத்தோடு கான்செப்ட்டை 2.30 மணி நேரத்தில் சொல்லி விட முடியாது என்பதற்காக தான் வெப் சீரிசாக எடுத்து இருக்கிறோம். சினிமாவிற்கும், இதற்கும் எந்தவித வித்தியாசமும் கிடையாது. இதில் நான் நடிப்பதற்கு காரணம் இயக்குநர் அறிவழகன் தான். மேலும் மிகப்பழமையான தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் பேனரில் நடிப்பது சந்தோஷம். ஆக்ஷன் படங்கள் என்றாலே காயங்கள் ஏற்படுவது சகஜம் தான். இந்த படத்திலும் ஆக்ஷன் காட்சிகளில் புதுமையாக நிறைய விஷயங்கள் செய்துள்ளோம் என்றார்.

   ரொமான்ஸ் காட்சிகள்

  ரொமான்ஸ் காட்சிகள்

  கேள்வி: இனிவரும் தொடர்களில் வாணிபோஜனுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பீர்களளா?

  பதில்: இப்படத்தில் Piracy ஆல் பாதிக்கப்படும் தயாரிப்பாளராக எம்.எஸ்.பாஸ்கர், அழகம்பெருமாள் ஆகியோர் வெளிப்படுத்திய உணர்வுகள் உண்மையானது. எம்.எஸ்.பாஸ்கர் வரக்கூடிய காட்சிகள் மிரட்டலாக இருக்கும். இது வெப் சீரிஸ் என்பதால் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும். குறிப்பாக நடிகைகள் வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், காக்கா முட்டை பசங்க என அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். நடிகை வாணிபோஜனுடன் ரொமான்ஸ் காட்சிகள் இருக்குமா என்பதை இயக்குனர் அறிவழகனுக்கும், கதையாசிரியர்களுக்கு மட்டும் தான் தெரியும் என்றார்.

   இன்வெஸ்டிகேஷன் வித்தியாசமானது

  இன்வெஸ்டிகேஷன் வித்தியாசமானது

  கேள்வி: தொடர்ந்து இயக்குநர் அறிவழகனுடன் பணியாற்ற என்ன காரணம்?

  பதில்: இயக்குனர் அறிவழகனுக்கும், எனக்கும் ஒரு நல்ல புரிதல் இருந்து வருகிறது. அதனால் தான் பார்டர், குற்றம் 23 ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றி வருகிறேன். என்னிடம் இருக்கின்ற நல்ல விஷயங்களை அவர் ஆராய்ந்து என்னை எப்படியெல்லாம் வித்தியாசமாக காட்டலாம் என்ற கோணத்தில் முயற்சிக்கிறார். அது போல நானும் அவர் எதிர்பார்த்ததை விட நன்றாக நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றுகிறது. குற்றம் 23, பார்டர் போன்ற படங்களிலும் இன்வெஸ்டிகேஷன் தொடர்பானது தான். ஆனால் இந்த தமிழ்ராக்கர்ஸ் வெப் சீரிசில் இன்வெஸ்டிகேஷன் முற்றிலும் வித்தியாசமானது. இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/WGSoXpKPB2o இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.

  English summary
  Arun Vijay Exclusive Interview: தியேட்டருக்கு சென்று படங்கள் பார்க்க முடியாதவர்கள் ஒடிடி தளத்தில் பார்க்கலாம். இதனால் சினிமாத்துறை வாழும் என்று நடிகர் அருண் விஜய் கூறியுள்ளார். நடிகர் அருண் விஜய் நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X