»   »  காமெடிக்கு மாறிய வில்லன்

காமெடிக்கு மாறிய வில்லன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இதுவரை விதம் விதமான வில்லத்தனத்தைக் காட்டி நடித்து வந்த ஆஷிஷ் வித்யார்த்தி, காமெடி டிராக்குக்கு மாறியுள்ளார்.

மும்பையிலிருந்து குலுக்கல் சுந்தரிகள் மட்டும்தான் தமிழ் சினிமாவுக்கு வர முடியுமா. அதை மாற்றிக் காட்டி வில்லனாக வந்து கோலிவுட்டை ரணகளப்படுத்தியவர் ஆஷிஷ் வித்யார்த்தி.

ஷாருக் கான், மாதவன் வரிசையில் டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்து வென்றவர்களில் வித்யார்த்தியும் ஒருவர். இந்தியிலிருந்து தமிழ் சினிமாவுக்குள் புகுந்த வித்யார்த்தி, தனது வித்தியாசமான நடிப்பால் சீக்கிரத்திலேயே முன்னணி வில்லனாக மாறினார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் வித்யார்த்தியின் வில்லத்தனம் வியாபித்தது. படு பிசியாக நடித்துக் கொண்டிருந்த வித்யார்த்தி, சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனாக பாபா படத்தில் மிரட்டினார்.

சமீப காலமாக முன்பு போல வித்யார்த்திக்கு படங்கள் கையில் இல்லை. இதனால் டிராக் மாற முடிவு செய்த வித்யார்த்தி முதல் முறையாக காமெடி டிராக்கில் கால் வைத்துள்ளார்.

விஷால், ப்ரியா மணியின் கலக்கல் நடிப்பில் உருவாகி வரும் மலைக்கோட்டை படத்தில் வித்யார்த்தி காமெடி டிராக்கில் வருகிறாராம். இந்தப் படத்துக்கு மட்டும்தானா அல்லது தொடர்ந்து காமெடியனாக தொடருவீர்களா என்று வித்யார்த்தியிடம் கேட்டால், மலைக்கோட்டையில் நான் காமெடி செய்கிறார். வெற்றி பெற்றால் மற்ற படங்களிலும் செய்வேன் என்கிறார்.

வில்லன் நடிகர் காமெடியனாக மாறுவது தமிழுக்குப் புதிதல்ல. வில்லத்தனத்திலும், காமெடியிலும் கலக்கலாக நடிப்பவர் ராதாரவி. அவரைப் போலவே வித்யார்த்தியும் இரட்டைக் குதிரை சவாரிக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளார். ராதாரவி போல அசத்துவாரா என்பதை மலைக்கோட்டை வந்தால் தெரியும்.

சிரிச்சுக்கிட்டே கொல்லுங்க!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil