»   »  ஜாக்கெட் இல்லாத ஆசின்

ஜாக்கெட் இல்லாத ஆசின்

Subscribe to Oneindia Tamil
Asin
தசாவதாரத்தில் ஆசின் ஜாக்கெட் இல்லாமல் ஒரு காட்சியில் நடித்துள்ளாராம்.

ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் பெரும் பொருட் செலவில் உருவாக்கியுள்ள தசாவதாரம் விருந்து படைக்க விரைவாக தயாராகிக் கொண்டிருக்கிறது.

படம் குறித்து நிறைய தகவல்கள் வெளியாகி விட்டன. லேட்டஸ்டாக ஒரு ஜில் தகவல் வெளியாகியுள்ளது. அது ஆசின், ஜாக்கெட் இல்லாமல் நடித்திருப்பது குறித்து.

படத்தில் இடம் பெறும் ஒரு பாடல் காட்சியில் ஜாக்கெட் இல்லாமல் ஆசின் நடிக்க வேண்டியிருந்ததாம். இதுகுறித்து ஆசினிடம், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரும், கமலும் எடுத்துக் கூறவே, காட்சியின் முக்கியத்துவம் கருதி மறுக்காமல் சம்மதித்தாராம் ஆசின்.

ஜாக்கெட் இல்லாமல் நடித்திருக்கிறாரே என்று கற்பனைக் குதிரையை கண்டபடி தட்டி விட்டு விட வேண்டாம். படு டீசன்ட்டாகத்தான் அந்தக் காட்சி இடம் பெற்றுள்ளதாம்.

இதை அறிந்த பலரும், தங்களது படத்திலும், அப்படி ஒரு காட்சியில் என்று கூறி ஆசினை அணுகினார்களாம். அத்தனை பேருக்கும் கும்பிடு போட்டு திருப்பி அனுப்பி விட்டாராம் ஆசின்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil