»   »  ஆஸ்திரேலிய பாடமான சேரன்!

ஆஸ்திரேலிய பாடமான சேரன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சேரன் நடித்த தவமாய் தவமிருந்து படம் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட திரைப்படங்களுக்கான தேசிய விருதுகளில் சேரன் நடித்த ஆடும் கூத்து மற்றும் தவமாய் தவமிருந்து படங்களும் இடம் பெற்றிருந்தது சேரனுக்கு மட்டுமல்லாது தமிழ் சினிமாவுக்கும் பெருமையைக் கொடுத்தது.

இப்போது இன்னொரு புதிய பெருமை சேரனுக்கும், தமிழ் சினிமாவுக்கும் கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகம் ஒன்று தவமாய் தவமிருந்து படத்தை தனது பாடத்தில் சேர்த்துள்ளது. பத்திரிக்கைத் தகவல் தொடர்பு தொடர்பான பாடத்தில் தவமாய் தவமிருந்து இணைக்கப்பட்டுள்ளதாம்.

இதுகுறித்து சேரன் கூறுகையில், தவமாய் தவமிருந்து படத்தை தங்களது சிலபஸில் சேர்ப்பதற்கு முன்பே என்னிடம் அந்தப் பல்கலைக்கழகம் அனுமதி கோரியது. சந்தோஷமடைந்த நான் உடனடியாக எனது ஒப்புதலை அளித்தேன்.

தமிழ்க் கலாச்சாரம் இந்தப் படத்தில் சிறப்பாக வெளிக்காட்டப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக அதிகாரிகள் என்னைப் பாராட்டினர். ஒவ்வொரு மனிதனுக்கும் இது ஒரு பாடம் என்றும் பாராட்டினர் என்றார் சேரன்.

சேரன், பத்மப்ரியா, ராஜ்கிரண், சரண்யா உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதி இயக்கியிருந்தார் சேரன்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil