»   »  தீபிகாவுக்கு விருது?

தீபிகாவுக்கு விருது?

Subscribe to Oneindia Tamil
Deepika Padukone

ஆசிய திரைப்பட விழாவில் தீபிகா படுகோனுக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பாலிவுட் உள்ளது.

மார்ச் மாதம் 17ம் தேதி ஹாங்காங்கில் ஆசிய திரைப்பட விருது விழா தொடங்குகிறது. இப்பட விழாவில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் திரைப்படங்கள் கலந்து கொள்கின்றன.

இந்த விழாவில் சிறந்த நடிகர், நடிகை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கப்படும்.

இதில் சிறந்த நடிகைக்கான விருதுக்கான போட்டியில் பாலிவுட் ஹாட் ஸ்டார் தீபிகா படுகோனின் பெயரும் இடம் பெற்றுள்ளதாம். ஓம் சாந்தி ஓம் படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து கலக்கிய தீபிகா, இந்த விருது நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளாராம்.

ஓம் சாந்தி ஓம் படத்துக்கே நிறைய விருதுகள் கிடைக்கலாம். எனவே நிச்சயம் தீபிகாவுக்கும் விருது கிடைக்கும் என்று பாலிவுட்டிலும் பலமான நம்பிக்கை உள்ளதாம்.

ஆசிய திரைப்பட விருது விழாவில் ராம் படத்தில் சிறப்பாக நடித்தற்காக நடிகர் ஜீவாவுக்கு சிறந்த நடிகர் விருதும், யுவன் ஷங்கர் ராஜாவுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருதும் ஏற்கனவே கிடைத்துள்ளது என்பது நினைவிருக்கலாம்.

தீபிகாவுக்கும் அந்த பாக்கியம் கிடைக்குமா?

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil