»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பொங்கலுக்கு ரிலீசான சத்யராஜின் ஐய்யர் ஐபிஎஸ் படத்தில் பாபிலோனா, அபிநயஸ்ரீ, ஜூனியர் சில்க் ஆகியோர் போட்ட ஆட்டத்துக்குஇணையாக சென்சார் போர்டின் கத்திரிக்கோலும் ஆட்டமாய் ஆடி விட்டதாம் ஆடி.

படத்தின் பல இடங்களில் கொத்து கொத்தாக வெட்டு விழுந்துள்ளது. அவ்வளவு ஆபாசம்.

அதே போல பாபிலோனா, அபிநயஸ்ரீ, ஜூனியர் சில்க் ஆகிய மன்மத ராணிகளுடன் மன்மதா.. மன்மதா ஓடிப் போலாமா என்று பாடி,சத்யராஜ் போட்ட ஒயின் ஷாப் டான்ஸ் வாங்கிய சென்சார் வெட்டு இருக்கிறதோ, பிலிம் ரோலில் இருந்து ரத்தம் வடியாதது தான் மிச்சம்.அவ்வளவு கட்டிங்குகளாம்.

ஒரு சத்யராஜ் கடமையே கண்ணாயினார் ஆன போலீஸ் அதிகாரி, இன்னொருவர் அரைகுறை ஊமை- ரெளடி. படத்தில் சத்யராஜின்வயதுக்கு மீறிய கலக்கல், சில இடங்களில் இடித்தாலும் மொத்தத்தில் ஓகே தான்.

மங்கை டிவி சீரியல் எடுத்த அரிராஜன், (சீரியலிலேயே முடிந்த அளவுக்கு கேமராவை எசகு பிசகான இடத்தில் வைத்து நடிகைகளைகொஞ்சம் அப்பிடி, இப்பிடித்தான் தான் காட்டுவார்) தான் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

பொங்கல் ரிலீசுக்காக சாமி கும்பிட்டுவிட்டு 12ம் தேதி சென்சார் போர்டிடம் பெட்டியை வைத்தார்களாம்.

படத்தை ஓட விட்டு பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள், கவர்ச்சியில் சுனாமியையே தோற்கடிக்கும் பல காட்சிகள் கண்ணில் விரிய,கத்திரிக்கோலை கையில் எடுத்தார்களாம்.

காட்சிக்குக் காட்சி நம்பர் குறித்து வெட்டு, வெட்டு என்று குறிப்பெழுத அரிராஜன் திணறித்தான் போனாராம்.


மேலே சொன்ன பாடல் இருக்கிறதே அதில் பாபிலோனாவின் அங்க அசைவுகள் படு மோசமாக இருக்க, 80 சதவீத பாடலுக்கு கட்விழுந்திருக்கிறது. படம் முழுவதுமாகப் பார்த்தால் 30 இடங்களில் வெட்டு விழுந்திருக்கிறது.

மன்மதா பாடல் காட்சியில் 20 சதவீத பிலிம் தான் மிஞ்சியது. அதை எப்படியெல்லாமோ ஒட்டு பிளாஸ்திரி போட்டுப் பார்த்தும் முழுப்பாடலாகவே, அரைப் பாடலாகவோ கூட தேத்த முடியவில்லையாம். இதனால் பாடலையே தூக்கிவிட்டார்கள்.

இருந்தாலும் எப்படியாவது இந்தப் பாடலை படத்தில் சேர்க்க தணிக்கை அதிகாரிகளுடன் பேசி வருகிறது தயாரிப்பாளர் தரப்பு. படம்ஓரளவு ஓடும் நிலையில் இந்த கும்மாங்குத்து பாடலும் இருந்தால் நல்லது என்று நினைக்கிறார்கள்.

அனுமதி கிடைக்காவிட்டால் இந்த மூன்று நடிகைகளுக்கு கொஞ்சம் பத்துகிற மாதிரி டிரஸ்ஸை மாட்டிவிட்டு ஓட வைத்து பாடல் காட்சியைபுதுசாய் எடுக்கவும் திட்டம் இருக்கிறது.

இதைத் தவிர படத்தில் சங்கவியும் சத்யராஜூம் நடித்த பல பலே பலே காட்சிகளும் பதம் பார்க்கப்பட்டுவிட்டனாம்.

அதே நிலை தான் சத்யராஜின் இன்னொரு ஜோடியாக வந்து தரிசனம் தந்த மேகாவின் சீன்களுக்கும் நேர்ந்துள்ளது.

இதே போல ஜதி என்ற படத்தில் அபிநயஸ்ரீ காட்டியுள்ள யப்பாடா கவர்ச்சி படத்துக்கே சிக்கலை ஏற்படுத்திவிட்டது. சென்சார் போர்ட்கத்திரியால் இந்தப் படத்தை ஆங்காங்கே வெட்டி புண்ணாக்கிவிட, காட்டுவதற்கு மிச்சம் என்ன இருக்கிறது என்று மிச்சமிருக்கிற பிலிம்ரோலை ஒட்டிப் பார்த்துக் கொண்டிருகிறதாம் இந்தப் படத்தின் யூனிட்.

இதனால் பொங்கலுக்கு வர வேண்டிய இந்தப் படம் டிராப் ஆகிவிட்டது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil