»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

பாபா படத்தின் தலையில் இன்னொரு கிரீடம் உட்காரப் போகிறது. இந்தப் படத்துக்கு கலைஞர் பாட்டெழுதப் போவதாக யூகங்கள் தான் வந்துகொண்டிருந்தன. இப்போது இந்தச் செய்தி உறுதியாகியுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் கவியரசு வைரமுத்து தான் இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதி வருகிறார்.

திடீரென ஒரு நாள் டிஸ்கஷன் போது திமுக தலைவர் கலைஞரை ஒரு பாட்டு எழுத வைக்கலாமே என்று யோசனை சொன்னாராம் கவிப் பேரரசு. இந்த ஐடியாரஜினிக்குப் பிடித்துப் போக உடனே லண்டனில் இருந்த ஏ.ஆர். ரஹ்மானைத் தொடர்பு கொண்டு பேசினார் ரஜினி.

அவரும் இது கணடிப்பாக மிக வித்தியாசமாக இருக்கும் என்று கூற கலைஞரைத் தொடர்பு கொண்டு பேசினார் வைரமுத்து. தொடர்ந்து அவரை நேரில் சந்தித்தார்ரஜினி.

கலைஞரும் ஓ.கே. சொல்லியிருந்தார்.

இப்போது தான் கலைஞரின் பாடலுத்தான சிச்சுவேசன் விவரிக்கப்பட்டிருக்கிறது. விரைவில் பாடலை தயரா செய்து தருவதாகக் கூறயிருக்கிக்கிறாராம்கருணாநிதி.

தொழிலாளர்களை மையமாக வைத்து இந்தப் பாடல் எழுதப்பட உள்ளதாம்.

கருணாநிதியின் பாடல், ரஹ்மானின் மியூசிக், ரஜினியின் டான்ஸ்... கேட்கவே வித்தியாசமாக இல்லை !

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil