»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

பாபா படத்தின் கணக்கு வழக்குகளை தாக்கல் செய்ய ரஜினி திடீரென வருமான வரித்துறை அலுவலகம் வந்தார்.

சமீபகாலமாக நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்களுக்கு வருமான வரித்துறை கிடுக்கிப் பிடி போட்டு வருகிறது. பல நடிகர்கள் வீட்டில்ரெய்ட் நடந்தது.

ரஜினியிடமும் பாபா படத்தின் கணக்கு வழக்குகளை அவ்வப்போது வருமான வரித்துறை கேட்டு வாங்கி வந்தது. ஆனால், அவரதுலோட்டஸ் இன்டர்நேசனல் தந்த கணக்கு வழக்குகளில் திருப்தியில்லை என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

பாபா மூலம் இதுவரை கிட்டத்தட்ட ரூ. 50 கோடி பார்த்துவிட்டார் ரஜினி. இதையடுத்து பாபா பட ரிலீஸ் நேரத்தில் ரஜினி வீட்டிலும் ரெய்ட்நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.

இந் நிலையில் நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை தலைமை அலுவலகத்துக்கு ரஜினியும் அவரது ஆடிட்டரும்வந்துள்ளனர். உடன் வழக்கறிஞரும் வந்தார். பாபா படத்தின் கணக்கு வழக்குகளை அவர்கள் அதிகாரிகளிடம் சமர்ப்பித்தாக வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Read more about: baba, cds, cinema, film, kannadiga, manisha, rahman, rajini, sex, songs

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil