»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரமாண்ட எதிர்பார்ப்புகள், எக்கச்சக்க கலாட்டாக்களுக்கு மத்தியில் ஒரு வாரத்தை முடித்து விட்டது ரஜினியின்பாபா. இரண்டாவது வாரத்தில் காலடி எடுத்து வைத்திருக்கும் பாபா படத்திற்கு ஓரளவுக்குக் கூட்டம் வருகிறதுஎன்றாலும் ரசிகர்கள் கூட்டம் பெருமளவு குறைந்து விட்டது.

முன்பெல்லாம் ரஜினி படத்தைத் திரையிட்டால் குறைந்தது ஒரு மாதத்திற்காவது ரசிகர்கள் கூட்டம்கட்டுக்கடங்காமல் இருக்கும். ஆனால் இம்முறை அப்படி இல்லை.

அதற்கு பல காரணங்களை ரசிகர்களே கூறுகிறார்கள். லத்தீப் என்ற தீவிர ரஜினி ரசிகர் கூறுகையில், தலைவர் படம்என்றாலே அது எங்களுக்கு ஸ்பெஷல்தான். அது எப்படி இருந்தாலும் அதைப் பார்ப்போம். அது போலத்தான்பாபாவும். ஆனால் பொதும்க்களும் அதிக அளவில் வந்து பார்க்க வேண்டும் என்று கருதியே நாங்கள் படம்பார்ப்பதைக் குறைத்துக் கொண்டு விட்டோம் என்றார். (இது எப்படி இருக்கு!!).

ஜெயக்குாார் என்ற ரசிகர் கூறுகையில், இந்தப் படத்தில் சில காட்சிகள் போர் அடிக்கும் விதமாக உள்ளன. நான்இதுவரை 5 தடவை பார்த்து விட்டேன். ஆனால் படையப்பாவை 11 தடவை பார்த்தேன் என்கிறார்.

ரமேஷ் என்ற ரசிகர் கூறுகையில், பாபாவை 2 தடவை மட்டுமே பார்த்துள்ளேன். இன்னும் ஒரு தடவை பார்ப்பேன்என்று நினைக்கிறேன். பாடல்களில் சூடு இல்லை. தேவாவை இசையமைக்க வைத்திருந்தால் படம் சூப்பர் ஹிட்ஆகியிருக்கும். மற்றபடி கிராபிக்ஸ் எல்லாம் சூப்பராக இருக்கு பாஸ் என்றார்.

ரசிகர்கள் கண்ணோட்டம் பல்வேறு விதமாக இருக்க, பிரமாண்டப்படுத்திய அளவுக்கு படத்தில் ஒன்றும் இல்லைஎன்று ரசிகர்கள் அல்லாதவர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையே தாறுமாறாக இருந்த டிக்கெட் கட்டணங்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் வழக்கமானகட்டணத்திற்கு மாறவுள்ளதாக சில தியேட்டர்கள் அறிவித்துள்ளன.

புதிய படம் என்பதால் முதல் சில வாரங்களுக்கு தியேட்டர் உரிமையாளர்களே டிக்கெட்டை நிர்ணயித்துக்கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதையடுத்த பாபா படத்தின் டிக்கெட் கவுண்டர்களிலேயே ரூ. 100 முதல் 250 வரை இருந்தது. பிளாக்கில் ரூ.1,500 வரை கூட விற்கப்பட்டது.

தற்போது ஒரு வாரம் முடிந்துவிட்ட நிலையில், கூட்டமும் பெருமளவில் இல்லை என்பதால், வரும்ஞாயிற்றுக்கிழமை முதல் வழக்கமான கட்டணத்திலேயே டிக்கெட் வழங்கப்படும் என்று சென்னை திருவான்மியூர்தியாகராஜா தியேட்டர் நிர்வாகத்தினர் நமது நிருபரிடம் தெரிவித்தனர்.

இதேபோல தமிழகத்தின் மற்ற பகுதிகளில் உள்ள தியேட்டர்களிலும் டிக்கெட் கட்டணங்கள் மீண்டும்குறைக்கப்படுகின்றன.

பாபாவைப் பார்க்க பெண்கள் கூட்டம் அதிக அளவில் வரவில்லை என்பதால் டிக்கெட் கட்டணத்தைக்குறைப்பதாகவும் பேசிக் கொள்கிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil