»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

"பாபா" படத்திற்குப் பிறகு சில மாதங்களுக்கு இமயமலையில் தங்கி ஓய்வெடுக்க திட்டமிட்டிருக்கிறாராம் ரஜினி.

ஜோதிகா, சிம்ரனுக்கு வழக்கமாக குரல் கொடுக்கும் சபீதா இப்போது குரல் கொடுப்பதில்லை. அவருக்குப் பதிலாக டிவி நடிகை தீபா வெங்கட்தான் பின்னணி பேசுகிறார். தீபாவின் குரல் இருவருக்கும் பிடித்துப் போய் விட்டதால் அவரையே தொடர்ந்து பேசச் சொல்கிறார்களாம் இரு நடிகைகளும். தீபா காட்டில் மழைதான்.

ராமராஜனுடன் விவாகரத்து பெற்றவுடன் தனக்குப் புது வாழ்க்கை கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் நளினி. ஆனால் பார்த்திபன் மூலம் புதிய பிரச்சினைதான் கிடைத்துள்ளது. இதனால் நொந்து போன நளினி இப்போதெல்லாம் அடிக்கடி கோவில்களுக்குப் போய் வருகிறார். ராசி கருதி தனது வீட்டைக் காலி செய்து விட்டு வேறு வீட்டிற்கு குடி போயுள்ளார்.

தன்னைப் பற்றி வெளியாகிக் கொண்டிருக்கும் கிசுகிசுக்களுக்கு விரைவில் பத்திரிகைகள் மூலம் பதிலளிக்கப் போகிறாராம் பார்த்திபன். இது கமல் ஸ்டைலாம்.

"சிவகாமி" என்ற படத்தில் இன்டர்நெட், ஈமெயில் மற்றும் கம்ப்யூட்டரில் உள்ள உதிரி பாகங்கள் ஆகியவற்றை வைத்து ஒரு பாடலை எழுதியுள்ளாராம் வைரமுத்து.

"யூத்" படத்திற்காக 70 அடி உயரத்திலிருந்து டூப் போடாமல் குதித்து சாதனை படைத்துள்ளாராம் விஜய். அதேபோல ஒரே ஒரு பாடல் காட்சிக்காக ரூ. 25 லட்சம் செலவில் செயற்கை அருவியையே ஏவி.எம். செட்டில் அமைத்திருக்கிறார்களாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil