»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கால்ஷீட் கொடுத்த தேதிகளில் படப்பிடிப்புக்குச் சென்றும் கூட "பாபா" டைரக்டர் கண்டு கொள்ளாததைத்தொடர்ந்து அப்படத்தில் நடிக்க முடியாது என்று ரஜினிகாந்த்திடமே பிரகாஷ் ராஜ் நேரடியாகக் கூறிவிட்டார்.

இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜுக்கு முதல்வர் வேடம் என்றும் அதற்குச் சம்பளமாக ரூ.10 லட்சமும் பேசி முடிவுசெய்யப்பட்டிருந்தது.

ஏற்கனவே அவர் கொடுத்திருந்த கால்ஷீட் தேதியன்று "பாபா" படப்பிடிப்புக்குச் சென்று தன் சம்பந்தப்பட்டகாட்சிகளுக்காக பிரகாஷ் ராஜ் காத்திருந்தார்.

ஆனால் அன்று முழுவதும் அவர் சம்பந்தப்பட்ட காட்சி எதுவும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து அன்று ஒருஷாட்டில் கூட நடிக்காமல் வீடு திரும்பினார் பிரகாஷ் ராஜ்.

மறுநாள் காலை மீண்டும் படப்பிடிப்புக்குச் சென்ற பிரகாஷ் ராஜ், டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணாவின்அழைப்புக்காகக் காத்திருந்தார். ஆனால் அன்றும் பிரகாஷ் ராஜை டைரக்டர் கண்டு கொள்ளவே இல்லை.

கடுப்புடன் சுரேஷ் கிருஷ்ணாவிடம் சென்ற பிரகாஷ் ராஜ் தன் சம்பந்தப்பட்ட காட்சிகளை எப்போது ஷூட்செய்யப் போகிறீர்கள் என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த சுரேஷ் கிருஷ்ணா "இன்னும் உங்கள் கதாபாத்திரம் முழுமையாகத் தயார் செய்யப்படவில்லை.நாளைக்கு வாங்க... பார்க்கலாம்" என்று கூறினார்.

இதையடுத்து அதற்கு அடுத்த நாளும் மிகவும் பொறுமையுடன் படப்பிடிப்புக்குச் சென்றார் பிரகாஷ். ஆனால்டைரக்டர் வழக்கம் போல அவரைக் கண்டு கொள்ளவே இல்லை.

இதையடுத்து யாரிடமும் எதுவும் பேசாமல் நேராக படத்தின் தயாரிப்பாளருமான ரஜினிகாந்த்திடம் சென்றபிரகாஷ் ராஜ், "ஸாரி சார். எனக்கு வேறு நிறைய படங்களில் நடிக்க வேண்டியுள்ளது. இந்தப் படத்திலிருந்து நான்விலகிக் கொள்கிறேன்" என்று கூறி விட்டு அந்தப் பக்கம் கூடத் திரும்பிப் பார்க்காமல் போய் விட்டார்.

தற்போது பிரகாஷ் ராஜுக்குப் பதிலாக நாசரை புக் செய்து மைசூருக்கு அழைத்துச் சென்றுள்ளனர் "பாபா"படப்பிடிப்புக் குழுவினர்.

"பாபா" விளம்பரத்துக்கு எதிர்ப்பு:

இதற்கிடையே "பாபா" படத்தில் ரஜினிகாந்த் புகை பிடிப்பது போல எடுக்கப்பட்டுள்ள விளம்பரங்களையும்போஸ்டர்களையும் கண்ட "பசுமைத் தாயகம்" என்ற அமைப்பு அதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரான டாக்டர் ராமதாசுடைய மகன் அன்புமணி தான் இந்த அமைப்பின் தலைவர்.அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியுள்ளதாவது:

"பாபா" படத்தின் போஸ்டர்களிலும் விளம்பரங்களிலும் ரஜினிகாந்த் புகை பிடித்துக் கொண்டிருப்பது போன்றகாட்சிகள் இடம் பெற்றுள்ளன.

பெரும்பாலான இளைஞர்களுக்கு, ஏன் சிறுவர்களுக்கும் கூட நடிகர்களைப் போல உடையணிவது, பேசுவது,சைகை செய்வது ஆகியவை தான் பேஷனாகியுள்ளது. எனவே ரஜினிகாந்த்தைப் போல் அவர்களும் புகை பிடிக்கவேண்டும் என்று நினைப்பதால் அவர்களுடைய வாழ்க்கையே பாழாகக் கூடும்.

எனவே வளரும் இளைய தலைமுறையினரைக் காப்பதற்காக "ஸ்ரீ" மற்றும் "பாபா" போன்ற படங்களின்போஸ்டர்கள் மற்றும் விளம்பரங்களில் உள்ள புகை பிடிக்கும் காட்சிகளை நீக்க வேண்டும்.

இனி வரும் படங்களில் புகைக்கும் காட்சிகளே இல்லாமல் டைரக்டர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றுஅன்புமணி கூறியுள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil