»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரஜினியின் பாபா பட ஆடியோ கேசட் திடீரென்று கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்டது. இருப்பினும் திட்டமிட்டதற்கு ஒரு நாள் முன்பாகவே வெளியானதால் கேசட் வாங்க அவ்வளவாக கூட்டம் இல்லை.

பாபா ஆரம்பம் முதலே பல சஸ்பென்ஸ்களுடனும், கிசுகிசுப்புகளுடனும் வளர்ந்து வந்தது. இப்போது பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதிலும் கூட வித்தியாசம் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

பாபா திரையிடப்படவுள்ள தியேட்டர்களில் டோக்கன் வழங்கப்பட்டது. அதை ரூ.50 கொடுத்து வாங்கியவர்களுக்கு மட்டுமே பாபா ஆடியோ கேசட் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ரசிகர்களும் முண்டியடித்துக் கொண்டு டோக்கன் வாங்கினர்.

வியாழக்கிழமை இந்த கேசட் (கேசட் மட்டுமே, ஆடியோ சிடி இப்போது ரிலீஸ் இல்லையாம்) வெளியாகும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் ஒரு நாள் முன் கூட்டியே புதன்கிழமை அன்றே திடீரென்று கேசட் ரிலீஸ் செய்யப்பட்டது.

இந்த விவரம் பல ரசிகர்களுக்குத் தெரியவில்லை. இதனால் கேசட் வாங்க தியேட்டர்களில் கூட்டம் இல்லை. அன்று மாலைக்கு மேல் தான் நிறைய பேருக்குத் தெரிய வந்தது.

பாபா பாடல்களுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். வாலி மற்றும் வைரமுத்து ஆகியோர் பாட்டுக்களை எழுதியுள்ளனர். அதில் வாலி எழுதியுள்ள "இமயமா இல்லை ராஜ்யமா..." என்ற பாடல் ரஜினிக்காக ஸ்பெஷலாக எழுதப்பட்டதாம்.

ரசிகர்களே, பாட்டுக்களை எல்லாம் ஒரு தடவை கேட்டா நூறு தடவை கேட்ட மாதிரின்னு இருக்காமல் சும்மா கேட்டுக்கிட்டே இருங்க!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil