»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரூ. 5 கோடியில் தயாராகியுள்ள பாபா படத்தின் விற்பனை ரூ 50 கோடியைத் தொடும் என்று தெரிகிறது.

பாபா படம் 250 பிரிண்டுகள் போடப்பட்டுள்ளது. இதில் 150 பிரிண்டுகள் தமிழக தியேட்டர்களுக்கும், மற்றவை ரஜினியின் சொந்த ஊரான கர்நாடகம், ஆந்திரம், கேரளம் மற்றும் மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் அனுப்பப்பட உள்ளன.

இதனால் தமிழகத்தில் இருந்து மட்டும் ரூ. 18 கோடியும், ஆந்திராவில் இருந்து 9 கோடியும், கர்நாடகத்தில் இருந்து 2 கோடியும், கேரளாவில் இருந்து 2 கோடியும் ரஜினிக்குக் கிடைக்கும். வெளிநாட்டு விற்பனை மூலம் ரூ. 7 கோடி கிடைக்கும். இவை குறைந்தபட்சம் இந்தப் படம் மூலம் கிடைக்கும் வருவாய் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடியோ மற்றும் வீடியோ உரிமையை ஆர்.பி.செளத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் ரூ. 5 கோடி கொடுத்து வாங்கியுள்ளது.

படத்தின் சாட்டிலைட் ஒளிபரப்பு உரிமையை வாங்க ஸ்டார் டிவியும் களத்தில் குதித்துவிட்டது. வழக்கமாக சன் டிவி தான் அதிக விலை கொடுத்து வாங்கும் தமிழ சேனலாக இருந்தது. இதன்மூலம் ரூ. 5 கோடி வரை இதில் பணம் பார்த்து வந்தார் ரஜினி.

ஆனால், இந்தமுறை தனது விஜய் டிவிக்காக எந்த விலை கொடுத்தாவது இந்த உரிமையை வாங்கிவிட ஸ்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது இதனால் இந்த விலை குண்டக்க மண்டக்க உயரவுள்ளது. விலை வழக்கத்தைவிட 2 மடங்கு ஆனாலும் ஆச்சரியமில்லை.

இது தவிர பாபா பாடல் காட்சிகள் மற்றும் ரஜினி தனியே நடந்து வரும்போது பின் புறம் பல நிறுவங்களின் போர்டுகள் கண்ணில் பட உள்ளன. இதற்காக டிவிஸ் நிறுவனத்தில் ஆரம்பித்து பெப்சி வரை பல நிறுவனங்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்துள்ளது ரஜினியின் லோட்டஸ் திரைப்பட நிறுவனம்.

ஆக பாபா மூலம் மிகக் குறைந்தபட்சம் ரஜினி ஈட்டப் போகும் பணம் சுமார் ரூ. 50 கோடி. படம் சூடு பிடித்தால் கூடுதல் பிரிண்டுகள் போட்டு ரிலீஸ் செய்யவும் வாய்ப்புண்டு. அப்போது பிரிண்டின் விலை பல மடங்கு அதிக விலைக்கு விற்கப்படும்.

எப்படியோ பாபா ரஜினியை டாடா ஆக்கப் போவது நிச்சயம்.

தியேட்டர்காரர்களுக்கு மிகப் பெரிய விலையில் பிரிண்டுகள் விற்கப்படுவதால் படத்தின் டிக்கெட் விலை வழக்கத்தை விட 4 மடங்காக இருக்குமாம். இதற்கு தமிழக அரசின் அனுமதியும் தியேட்டர்காரக்களுக்குக் கிடைத்துவிட்டது.

இந் நிலையில் பாபா படம் தான் ரஜினியின் கடைசிப் படமாக இருக்கும் என்று கோடம்பாக்கத்தில் முக்குக்கு முக்கு பேச ஆரம்பித்து விட்டார்கள்.

தபால் கார்டுகளில் பாபா:

தபால் கார்டுகளில் தனியார் நிறுவனங்களின் விளம்பரத்தை ஏற்க தபால்துறை முடிவு செய்துள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதி முதல் இத் திட்டம் அமலுக்கு வருகிறது.

தமிழகத்தில் முதல்முறையாக பாபா படத்தின் விளம்பரத்துடன் இந்த கார்டுகள் வெளியாக உள்ளன.

திருட்டு ஆடியோ பறிமுதல்:

பல புதிய படங்களின் திருட்டு வி.சி.டி. சோதனைக்காக சென்ற போலீஸாருக்கு பாபா படத்தின் ஆடியோ கேசட்டுகளே போலியாக தயாரிக்கப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து ஒருவரை கைது செய்தனர்.

செங்குன்றம், புழல் போன்ற பகுதிகளில் அதிக அளவில் திருட்டு விடியோ சிடிக்கள் புழக்கத்தில் விடப்பட்டிருப்பதாக போலீஸாருக்குத் தெரிய வந்தது. இதையடுத்து சென்னை வீடியோ சிடி திருட்டுத் தடுப்புப் போலீஸார் மாதவரம், புழல், செங்குன்றம் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது போலீஸாருக்கு பெரும் ஆச்சரியம் காத்திருந்தது.

வீடியோ சிடிக்களை எதிர்பார்த்துப் போனவர்களுக்கு பாபா படத்தின் போலி ஆடியோ சிடிக்கள் ஆயிரக்கணக்கில் கிடைத்தன.

பல ஆயிரம் கேசட்டுகளையும், கேசட்டின் போலி அட்டையை தயார் செய்யும் கருவிகள் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றினர். இது தவிர தென்காசிப் பட்டணம், எழுமலை, யூத், சாமுராய் ஆகிய புதிய படங்களின் போலி ஆடியோ கேசட்டுகள் இங்கு சிக்கின.

பாபா காலேஜ்:

விஜய்காந்தைத் தொடர்ந்து ரஜினியும் ஒரு இன்ஜினியரிங் கல்லூரி ஆரம்பிக்க உள்ளார். சென்னை வேளச்சேரியில் இதற்கான ஆரம்ப வேலைகள் தொடங்கிவிட்டன.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil