»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினி படங்களில் ரஜினியை விட அதிகமாக எதிர்பார்க்கப்படும் சில விஷயங்களில் வில்லன் கேரக்டரும் ஒன்று.

ரஜினி படத்தில் வில்லனாக நடிக்க பயப்படுவார்கள். காரணம், படத்தில் மட்டுமல்லாது, நிஜத்திலும் கூட அவர்களை ரஜினியின் வில்லனாக,ரஜினி ரசிகர்கள் பார்ப்பதுதான்.

அந்த வகையில் பாபாவில் ரஜினியுடன் மோதப் போகும் வில்லன் யார் என்பதை அறிய ரசிகர்களுக்கு ஆர்வமாக இருக்கும். பாபாவுடன்மோதப் போவது ஒரு வில்லன் இல்லையாம், இரண்டு மோசமான வில்லன்களாம். இவர்களுடன் காமெடி வில்லன் ஒருவரும்இருக்கிறாராம்.

ஆஷிஷ் வித்யார்த்தி மோசமான அரசியல்வாதி வில்லனாக வருகிறார், விஷப்பாம்பின் வீரியம் கொண்ட முதல்வராக பிரகாஷ் ராஜ்நடிக்கிறார். இவர்களைத் தவிர ரஜினியுடன் கூடவே இருந்து காலை வாரி விடும் வில்லனாக வருகிறார் "சித்தி" புகழ் வாசு விக்ரம்.

3 வில்லன்கள் இருந்தாலும் ஆஷிஷ் வித்யார்த்திதான் தன்மை வில்லனாம். இவரது வில்லத்தனம் தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாதஅளவுக்கு பிரமாண்டமாக பேசப்படுமாம். அதேபோல, பிரகாஷ் ராஜும் அதி பயங்கரமாக வில்லத்தனம் செய்கிறாராம்.

காமடியாக பேசிக் கொண்டே, ரஜினியை ஏமாற்றி சமயம் பார்த்து காலை வாரி விடும் சகுனியாக நடிக்கிறாராம் வாசு விக்ரம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil