»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

எனது மகள் நடிகை பாபிலோனாவை அவரது கணவர் மும்பையில் விற்க முயற்சி செய்தார் என்றுபாபிலோனாவின் தாயார் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

கவர்ச்சி நடிகை பாபிலோனாவின் கணவர் அர்ஜூன்தாஸை, பாபிலோனாவின் அண்ணன்கள், அடியாட்களைவைத்து கடத்தியதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அர்ஜூன்தாஸ் பாபிலோனாவுக்கு முன்பாக வேறொருபெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டு 2 குழந்தைகளும் உள்ளதால் ஆத்திரமடைந்த பாபிலோனாவின் பாட்டி,அவரது அண்ணன்கள் ஆகியோர் சேர்ந்து அர்ஜூன் தாஸை கடத்தி வீட்டில் அடைத்து வைத்துகொடுமைப்படுத்தியுள்ளனர்.

அர்ஜூன் தாஸின் முதல் மனைவி மினி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் நடவடிக்கை எடுத்துஅர்ஜூன்தாஸை மீட்டனர். பாபிலோனாவின் அண்ணன்கள் மற்றும் அடியாட்கள் உள்ளிட்ட 5 பேரை கைதும்செய்துள்ளனர்.

இந் நிலையில், பாபிலோனாவின் பாட்டி சொர்ணா கூறுகையில், இது பொய் வழக்கு. எனது பேத்திபாபிலோனாவிடம் நன்கு பழகி, அவரை மயக்கி தனது வலையில் வீழ்த்தி, முதலாவது கல்யாணத்தை மறைத்துவிட்டு கல்யாணம் செய்து கொண்டு நகைகளையும் பறித்துக் கொண்டு இப்போது பொய்யான வழக்கைப்போட்டுள்ளார் அர்ஜூன்தாஸ் என்றார்.

பாபிலோனா படப்பிடிப்புகள், வெளியூர்களுக்கு செல்லும்போதெல்லாம் அவருக்கு பாதுகாப்பாக பாட்டிசொர்ணாதான் செல்வது வழக்கம். பார்த்தால்தான் பாட்டியாக இருப்பார் சொர்ணா. பேச ஆரம்பித்தால் அதிரடியாகபேசுவார் என்பதால் அவரிடம் நெருங்கவே யாரும் பயப்படுவார்களாம்.

பாபிலோனாவின் தாயார் தேவியம்மா கூறுகையில், சுங்க இலாகா அதிகாரி என்று கூறி எனது மகளைஅர்ஜூன்தாஸ் திருமணம் செய்து கொண்டார். எனது 2 மகன்களுக்கும் வேலை வாங்கித் தருவதாகவும் கூறி ரூ. 1லட்சம் பணத்தையும் வாங்கியுள்ளார்.

இந் நிலையில்தான் அவரது முதல் திருமணம் குறித்துத் தெரியவந்தது. இது குறித்து துபாய் சென்றுள்ளபாபிலோனாவிடம் தெரிவித்தோம். தான் 1ம் தேதி வந்து விடுவதாகவும், அதுவரை அர்ஜூன் தாஸை வீட்டில்இருக்கும்படி கூறுமாறும் தெரிவித்தார் பாபிலோனா.

இதை அர்ஜூன் தாஸிடம் தெரிவித்தோம். அவரும், குடும்பத்தோடு வந்து பாபிலோனா வீட்டில் தங்கிக்கொள்வதாக கூறி வந்து தங்கினார். இப்படி இருக்கும்போது பொய்யான புகாரைக் கொடுத்துள்ளார்.

எனது மகளை ஒரு முறை மும்பையில் விற்க அர்ஜூன் தாஸ் முயன்றார். எனது மகளின் நகைகளையும் விற்றுக்காசாக்கி விட்டார். அந்தப் பணத்தை அவர் திருப்பித் தர வேண்டும். அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தவேண்டும் என்றார் தேவியம்மா.

பாபிலோனா, அவரது பாட்டி மற்றும் குடும்பத்தினர் குறித்து கோலிவுட்டில் அனைவருக்கும் "நன்றாகவே" தெரியும்என்பதால் இந்த விஷயத்தை கோலிவுட்காரர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. "காண்டிராக்ட்" முறையில்துபாயில் பல இடங்களில் நடனமாட சென்றுள்ள பாபிலோனா 1ம் தேதிதான் சென்னை வருகிறார்.

வந்தவுடன் அவர் கைதாகவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

  • கணவரையே கடத்திய பாபிலோனா

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil