»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கணவரையும் அவரது குழந்தைகளையும் கடத்தி வந்து வீட்டில் அடைத்து வந்த விவகாரத்தில் பலான நடிகைபாபிலோனாவுக்கு நீதிமன்றம் இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

ஏற்கனவே திருமணமான அர்ஜூன் தாஸ் என்பவரை மீண்டும் திருமணம் செய்து கொண்டார் பாபிலோனா.

ஆனால், தனது முதல் திருமணத்தை தன்னிடம் இருந்து மறைத்துவிட்டதாகவும், 100 பவுன் நகைகளை வாங்கிக்கொண்டதாகவும் கூறி அவரை முதல் மனைவி மினியிடம் இருந்து கடத்தி வந்தார் பாபிலோனா.

உடன் அவரது இரு குழந்தைகளையும் கடத்தி வந்து தனது வீட்டில் அடைத்து வைத்தார்.

இதையடுத்து போலீசார் தலையிட்டு அர்ஜூனையும் குழந்தைகளையும் மீட்டனர். கடத்தலுக்கு உதவிய பாபிலோனாவின் சகோதரர்கள்மற்றும் கும்பலைக் கைது செய்தனர்.

பாபிலோனா துபாயில் கலை நிகழ்ச்சிகாகப் போயிருந்ததால் கைதாவதில் இருந்து தப்பினார்.

இந் நிலையில்சென்னை திரும்பிய பாபிலோனா முன் ஜாமீன் கோரி சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு செய்தார்.

இதனைவிசாரித்த நீதிமன்றம் இன்று அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

அடுத்த ஒரு மாதத்துக்கு தினமும் காலையில் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என அவருக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகம் சென்ற பாபிலோனா, அர்ஜூன் தாஸ் மீது புகார்கொடுத்தார். உடன் அவரது தாயார் தேவி, பாட்டி கிருஷ்ணகுமாரியும் சென்றனர். இதன் பின் நிருபர்களிடம்பாபிலோனா கூறியதாவது:

நான் ஜிம்முக்குத் தனியாக போய் வந்தபோது அர்ஜூன்தாஸ் அறிமுகமானார். தன்னை கஸ்டம்ஸ் இன்ஸ்பெக்டர்என்று கூறினார். அவ்வப்போது வெளிநாட்டு சாக்லேட், குளிர்பானம் தருவார். அதை சாப்பிட்டதும் எனக்கு சுயநினைவு இருக்காது. மயக்க நிலையில் இருப்பேன் (!)

இந் நிலையில் எனது தம்பிகளுக்கு வேலை வாங்கித் தருவதாக ரூ. 1 லட்சம் வாங்கினார். என்னை ரிஜிஸ்திரார்ஆபிசுக்கு அழைத்துச் சென்று சில ஆவணங்களில் கையெழுத்து போடச் சொன்னார். அங்கிருந்து நான் வீட்டுக்குச்சென்றுவிட்டேன். என்னை அவர் திருமணம் செய்து கொண்டதே எனக்குத் தெரியாது (!!!).

இதற்கிடையே துபாய் நிகழ்ச்சிக்கு போவதற்காக வங்கி லாக்கரில் இருந்த ரூ. 5 லட்சம் மதிப்புள்ள நகைகளைஎடுத்து வந்தேன். அப்போது அர்ஜூன் தாஸ் பேசினார். ஜிம்முக்கு வரச் சொன்னார்.

உடனே வெளிநாட்டுசாக்லேட், குளிர்பானம் தந்தார் (மயக்கம் வரும் என்று தெரிந்தும் இவர் ஏன் குடித்தார்?).

உடனே எனக்கு மயக்கம வந்துவிட்டது (அடாடடடா). அதன் பிறகு என் காரில் இருந்த நகைகளை எடுத்துச்சென்றுவிடடார். வீட்டுக்குத் திரும்பிய பின்னர் தான் நகைகளை அவர் எடுத்தது தெரிந்தது. இதை நான்யாரிடமும் சொல்லவில்லை.

நான் துபாய் சென்றுவிட்டேன். என் தம்பிகள் வேலை சம்பந்தமாக அர்ஜூன் தாசிடம் பேசினர்.

அப்போதுதான்தாங்கள் ஏமாந்தது தெரிந்தது. உடனே என்னைத் தொடர்பு கொண்டு தம்பிகள் பேசினர். நான் அர்ஜூன்தாசிடம்பேசினேன்.

காசு வாங்கிக் கொண்டு வேலை வாங்கித் தராமல் ஏமாற்றியது குறித்து போலீசில் புகார் கொடுப்பேன் என்றேன்.

உடனே அவர் என் வீட்டுக்குப் போய், நகைகளை அடகு வைத்துவிட்டதையும், தம்பிகளிடம் பணம் வாங்கியதைதிருப்பித் தருவதாகவும் கூறியுள்ளார். கேரளாவில் உள்ள தனது சொத்துக்களை விற்று பணத்தைத் திருப்பித்தருவதாகவும், பலரையும் வேலை வாங்கித் தருவதாக சொல்லி ஏமாற்றியுள்ளதால் பாதுகாப்புக்காக என் வீட்டில்தங்கியிருக்க அடைக்கலம் கேட்டுள்ளார்.

அதை நம்பி என் பாட்டி அவரையும், மனைவி மினி, குழந்தைகளையும் வீட்டில் இருக்க வைத்துள்ளார்.

ஆனால், தனது மாமியார் மூலம் தன் குடும்பத்தை நாங்கள் கடத்தி வந்துவிட்டதாக போலீசில் புகார்கொடுத்துள்ளார் அர்ஜூன்தாஸ் என்றார் ஒன்னுமே தெரியாத பாப்பாவாக!

  • பாபிலோனோவை மும்பையில் விற்க முயற்சி: தாயார் புகார்
  • கணவரையே கடத்திய பாபிலோனா

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil