»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்துப் போட்டார் கவர்ச்சி நடிகை பாபிலோனா.

கவர்ச்சி நடிகை பாபிலோனாவின் கணவர் அர்ஜூன்தாஸை, பாபிலோனாவின் சகோதரர்கள் கடத்திச் சென்றுஅடைத்து வைத்து சித்திரவதை செய்ததாக சென்னை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த புகாரில் தன்னைக் கைது செய்வதைத் தடை செய்யக் கோரி முன்ஜாமீன் கேட்டு சென்னை செஷன்ஸ்நீதிமன்றத்தில் பாபிலோனா மனு செய்திருந்தார். அதில் அவருக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் கிடைத்தது.

நிபந்தனைப்படி சைதாப்பேட்டை 9வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகிய பாபிலோனா நீதிபதி ரவீந்திரன்முன்பு கையெழுத்துப் போட்டார்.

பின்னர் நீதிபதியிடம் ஒரு மனுவை பாபிலோனா தாக்கல் செய்தார். அதில்தன்னிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கார், செல்போன் ஆகியவற்றை திருப்பி ஒப்படைக்கும்படிகோரியிருந்தார்.

ரோஜாவும் ஆஜர்

இதேபோல, சைதாப்பேட்டை 23வது நீதிமன்றத்தில் நடிகை ரோஜா மீதான செக் மோசடி வழக்கு விசாரணைநடந்து வருகிறது. இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது ரோஜா ஆஜரானார். அவரது வக்கீல் சிவா நீதிபதிஉமா மகேஸ்வரியிடம் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.

அதில் நடிகை ரோஜா ஹைதராபாத் செல்ல வேண்டியிருப்பதால், வழக்கைத் தள்ளிவைக்குமாறு கோரினார். இதைஏற்ற நீதிபதி உமா மகேஸ்வரி, வருகிற 26ம் தேதிக்கு விசாரணையைத் தள்ளி வைத்தார்.

ஒரே நாளில் இரண்டு நடிகைகள் நீதிமன்றத்தில் ஆஜரானதால் சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் ரசிகர்கள்திரண்டு பரபரப்பு நிலவியது.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil