»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

தனது கணவரிடம் இருந்து விவாகரத்து வழங்குமாறு நடிகை பாபிலோனா நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளார்.

ஏற்கனவே திருமணமான அர்ஜூன் தாஸை சமீபத்தில் அவரது முதல் குடும்பத்திடம் இருந்து பிரித்து தனதுதம்பிகளை விட்டு கடத்தி வரச் செய்தார் பாபிலோனா. கூடவே அவரது குழந்தைகளையும் கடத்தி வந்தார்.

இது குறித்து முதல் மனைவி மினி காவல்துறையில் கொடுத்த புகாரின்பேரில் பாபிலோனா வீட்டில் நுழைந்தபோலீஸ் படை அவர்களை விடுவித்தது.

பாபிலோனாவின் தம்பிகளையும் கைது செய்தது. அப்போது துபாயில்இருந்த பாபிலோனா கைதாகும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து திரும்பி வந்தவுடன் முன் ஜாமீன் பெற்றுதப்பினார்.

தன்னை அர்ஜூன் தாஸ் ஏமாற்றித் திருமணம் செய்துவிட்டதாக பாபிலோனா கூறி வருகிறார். தனக்கு மயக்கமருந்து கொடுத்து, நினைவற்ற நிலையில் இருந்தபோது தன்னை அவர் பதிவுத் திருமணம் செய்து கொண்டதாகவும்கூறியுள்ளார்.

இந் நிலையில் பாபிலோனா இன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் குடும்ப நல நீதிமன்றத்துக்கு வந்தார். அங்கு ஒருமனுவைத் தாக்கல் செய்தார். அதில், எனக்கும் அர்ஜூன் தாசுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் 6ம் தேதி திருமணம்நடந்தது. அப்போது அவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் இருப்பது எனக்குத் தெரியாது.

பணத்துக்கு ஆசைப்பட்டு என்னை அவர் ஏமாற்றித் திருமணம் செய்து கொண்டார். எனவே, எனக்கு விவாகரத்துஅளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

  • எனக்கு ஒன்னுமே தெரியாது: பாபிலோனா
  • பாபிலோனோவை மும்பையில் விற்க முயற்சி: தாயார் புகார்
  • கணவரையே கடத்திய பாபிலோனா

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil