»   »  பச்சன்களுடன் ஒரு உலக டூர்!

பச்சன்களுடன் ஒரு உலக டூர்!

Subscribe to Oneindia Tamil

அபிஷேக் பச்சன், அவரது மனைவி ஐஸ்வர்யா பச்சன் உள்ளிட்டோர் அடங்கிய பாலிவுட் குழுவினர் 18 நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து தி அன்பர்கட்டபிள் டூர் என்ற பெயரில் இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளனர்.

இந்தக் குழுவினர் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் கனடா தலைநகர் டோரண்டாவிலிருந்து தங்களது பயணத்தைத் தொடங்குகின்றனர். அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா பச்சனின் கலக்கல் நிகழ்ச்சியுடன் இந்த டூர் தொடங்குகிறதாம்.

ஐஸ், அபிஷேக்கை கனடா மீடியாக்கள், பாலிவுட்டின் ஏஞ்செலினா ஜூலி மற்றும் பிராட் பிட் என வர்ணித்துள்ளன. தங்களது டூர் குறித்து இருவரும் ஞாயிற்றுக்கிழமை டோரண்டோவில் செய்தியாளர்கள் முன்னிலையில் அறிவித்தபோது ஆரவாரத்துடன் அதற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இவர்கள் இருவர் தவிர பாலிவுட்டின் ஹாட்டஸ்ட் ஸ்டார்கள் பலரும் பங்கேற்கவுள்ளனர். செய்தியாளர்களிடம் அபிஷேக் பச்சன் இந்த டூர் குறித்து விவரித்துக் கூறுகையில், உலகம் வெப்பமயமாதல் பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நமது பூமிக்கு பல பாதகமான அம்சங்கள் ஏற்பட்டு வருகின்றன. எனவே அது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நிகழ்ச்சியை பயன்படுத்தவுள்ளோம் என்றார்.

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. அமிதாப்பும் இதில் பங்கேற்கிறார். மேலும் தெற்காசிய நடிகர், நடிகைகளும் கூட பங்கேற்கவுள்ளனர்.

பச்சன்கள் தவிர பிபாஷா பாசு, லாரா தத்தா உள்ளிட்டோரும் இதில் கலந்து கொள்கின்றனர்.

வான்கூவர், நியூயார்க், லாஸ் ஏஞ்சலஸ், லண்டன், கெய்ரோ, சிட்னி, சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நகரங்களில் இந்த திரையுலக இசைப் பயணம் நடைபெறவுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil