»   »  பக்ருவின் கின்னஸ் சாதனை

பக்ருவின் கின்னஸ் சாதனை

Subscribe to Oneindia Tamil
Fakhru with Mallika Kapoor
கேரளாவைச் சேர்ந்த குள்ள நடிகர் பக்ரு எனப்படும் அஜய் குமார் உலகிலேயே குள்ளமான ஹீரோ என்ற புதிய கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார்.

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் பக்ரு. 30 வயதாகும் இவர் அற்புதத் தீவு என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படம் முதலில் மலையாளத்திலும், பின்னர் தமிழிலும் வெளியானது.

தமிழில் டிஷ்யூம் என்ற படத்தில் நடித்துள்ளார். இவரது உலகிலேயே மிகவும் குள்ளமான நடிகர், அதிலும் கதாநாயகனாக நடித்துள்ளவர் பக்ருதான் என்று கூறப்பட்டது. இதையடுத்து அவரது அற்புதத் தீவு படம் கின்னஸ் சாதனைப் புத்தக நிர்வாகிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தப் படத்தைப் பார்த்த கின்னஸ் அமைப்பினர், உலகிலேயே மிகவும் குள்ளமான கதாநாயகன் என பக்ருவை அங்கீகரித்துள்ளனர். அவரது பெயர் 2008ம் ஆண்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெறவுள்ளது.

தமிழ்ப் பட ஷூட்டிங்குக்காக பழனி அருகே முகாமிட்டுள்ள பக்ரு இந்த செய்தி குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

திரையுலகினர், ரசிகர்கள், கேரள, தமிழக மக்களால்தான் தனக்கு இந்தப் பெருமை கிடைத்தது. இதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறியுள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil