»   »  பாலா பார்வையில் மீனாட்சி

பாலா பார்வையில் மீனாட்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாலாவின் நான் கடவுள் படத்தில் நடிக்கும் வாய்ப்பு மீனாட்சியைத் தேடிப் போயிருக்கிறதாம். பாவனாவுக்குப் பதில் மீனாட்சி நாயகியாகும் வாய்ப்பு அதிகம் உள்ளதாம்.

பாலாவின் இயக்கத்தில் உருவாகும் படம் நான் கடவுள். ஆரம்பத்திலிருந்து பல குழப்பங்கள், சிக்கல்கள். எல்லாம் சரியாகி ஒரு வழியாக ஷூட்டிங் ஆரம்பித்தது.

இப்போது புதிதாக ஒரு சிக்கல் முளைத்துள்ளது. ஹீரோயின் பாவனா மீது பாலாவுக்கு திருப்தி வரவில்லை. இதனால் அவரை வைத்து சில காட்சிகளைப் படமாக்கியதோடு விட்டு விட்ட பாலா இப்போது புது நாயகியைத் தேடி வருகிறார்.

கடந்த வாரம் மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட 2 நடிகைகளிடம் ஸ்கீரன் டெஸ்ட் எடுத்துப் பார்த்தார் பாலா. மீரா மீது அவருக்குத் திருப்தி இருந்தாலும் கூட பரட்டை என்கிற அழகுசந்தரம், திருமகன் ஆகிய படங்கள் தோல்வி அடைந்ததால், அவரை வேண்டாம் என நிராகரித்து விட்டாராம்.

மீராவை நிராகரித்த பாலாவின் பார்வை இப்போது கருப்பசாமி குத்தகைதாரர் படத்தின் நாயகி மீனாட்சி மீது படிந்துள்ளதாம். குறிப்பாக அப்படத்தில் வரும் ஒரு பாடலுக்கு மீனாட்சி ஆடியிருந்த நடனம் பாலாவை வெகுவாகக் கவர்ந்து விட்டதாம்.

எனவே பாவனாவுக்குப் பதில் மீனாட்சி நடிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. அதேசமயம், பாவனாவுக்கு இப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இன்னும் உள்ளதாம். இதனால், நான் கடவுளுக்காக மீண்டும் கால்ஷீத் தர அவர் தயாராக உள்ளாராம்.

படத்தின் நாயகி மட்டுமல்லாமல், படமே கூட கைமாறிப் போயுள்ளதாம். பாலாவின் ஒப்புதலுடன், ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனிடம் படத்தை விற்று விட்டாராம் ஒரிஜினல் தயாரிப்பாளர் தேனப்பன்.

மே இறுதியில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil