»   »  பார்வதியா, மீனாட்சியா?

பார்வதியா, மீனாட்சியா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

நான் கடவுள் நாயகி யார் என்பது அந்தக் கடவுளுக்குத்தான் கரெக்டாக தெரியும் போல.அந்த அளவுக்கு பெரும் குழப்பமாக இருக்கிறது.

நான் கடவுள் படத்தின் ஆரம்பத்திலிருந்தே பல பஞ்சாயத்துக்கள் தொடர்ந்தபடி உள்ளன.முதலில் அஜீத் நடிப்பதாக இருந்தது. பின்னர் என்ன நடந்ததோ, அஜீத் தூக்கப்பட்டார். ஆர்யா கடவுளாக்கப்பட்டார்.

பாவனா நாயகியாக நடிப்பதாக இருந்தது. அவரை வைத்து சில காட்சிகளைக் கூட படமாக்கி விட்டார் பாவனா. இந்த நிலையில் பாவனா சரியில்லை என்று கூறி அவரைத் தூக்கி விட்டார்.

இடையில் படமே கை மாறி விட்டது. முதலி்ல் தயாரிப்பாளராகஇருந்த தேனப்பன் சமீபத்தில் அதிலிருந்து விலகிக் கொண்டு விட்டார்.

இப்படிஅடுத்தடுத்து குழப்பத்தில் சிக்கித் தவிக்கும் நான் கடவுள் படத்தின் நாயகி யார் என்பதில் இப்போது பெரும் குழப்பம் நீடிக்கிறது.

பாவனாவைத் தூக்கிய பின்னர் கருப்பசாமி குத்தகைதாரர் படத்தின் நாயகி மீனாட்சியை கூப்பிட்டு மேக்கப் டெஸ்ட் போட்டுப் பார்த்தார் பாலா.

ஆனால் மீனாட்சி மீது பாலாவுக்கு திருப்தி வரவில்லை போலும்.

இந்த நிலையில் மலையாள நடிகை பார்வதியை பாலா புக் பண்ணிவிட்டதாக கூறப்படுகிறது. பார்வதி, மலையாளத்தில் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் வினோதயாத்ரா என்ற படத்தில் நடித்துள்ளார். மலையாள புத்தாண்டுக்கு ரிலீஸ் ஆன இந்தப் படம் செம ஓட்டம் ஓடுகிறதாம்.

இதைப் பார்த்த பின்னர்தான் பார்வதியை பிக்ஸ் செய்தாராம் பாலா.இதுகுறித்து பாலாவிடமே கேட்டபோது, ஆமாமா, நாட்டுக்கு ரொம்ப தேவை பங்காளி என்று மதுரை நக்கலுடன் ஆரம்பித்த பாலா தொடர்ந்து, விடுங்க பாஸு, யாராவது நடிப்பாங்க. ஆனா, என் கதை யாரையும் சார்ந்து இருக்காது. எந்த நாயகியும் இந்தக் கதையில் நடிக்க முடியும். விரைவில் எனது நாயகி யார் என்பதை அறிவிப்பேன், பொறுத்திருங்க என்றார்.

பாலா இப்படிச் சொன்னாலும் பார்வதிதான் நான் கடவுள் நாயகி என்று உறுதியாக கூறப்படுகிறது. சமீபத்தில் பார்வதி அளித்த ஒரு பேட்டியில், பாலா சார்,தமிழ் சினிமாவில் அருமையான இயக்குநர்களில் ஒருவர். அவரது படங்களை நான் பார்த்துள்ளேன். அவர் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆவதை பெருமையாக, பொருத்தமாக கருதுகிறேன் என்றார்.

பார்வதியோ, மீனாட்சியோ, மொத்தத்தில் ஆர்யாவும் மலையாளி,பார்வதியும் மலையாளி, நல்லாருக்கு பங்காளி!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil