»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிக் காட்டிய பாலச்சந்தர் டைரக்ஷனில் சதமடிக்கப்போகிறார்.

சாதாரண மத்திய அரசு அலுவலராக இருந்த கே.பாலச்சந்தர் வெள்ளித் திரையில் புகுந்து ஒரு கலக்கு கலக்கி 99 படங்களை இயக்கி முடித்துள்ளார். இவர்இயக்கிய 99 படங்களில் 100 சதவீத படங்களும் தரமான படங்கள். அத்தனை படத்திலும் அழுத்தமான கருத்தை வைக்கத் தவறியதில்லை இயக்குநர்இமயம்.

பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளிவந்த நூற்றுக்கு நூறு, எதிர் நீச்சல், நீர்க்குமிழி, அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள், நினைத்தாலேஇனிக்கும், தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை உள்ளிட்ட பல படங்கள் பெரிதும் பேசப்பட்டவை, சலசலப்பை ஏற்படுத்தியவை.

தண்ணீர் தண்ணீர் படம் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரின் அதிருப்தியைப் பெற்றது. அந்த அளவுக்குஅப்படத்தில் தண்ணீர் பிரச்சினையை வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தார் பாலச்சந்தர்.

பாலச்சந்தரின் படங்களில் பெண்களுக்கு முன்னுரிமை இருக்கும். பெண்களை முதல்நிலைப்படுத்தி அவர் இயக்கியபடங்களுக்கு பல நேரங்களில் முனுமுனுப்புகள் எழுந்தாலும் கூட அந்த கேரக்டர்கள் பிரதிபலிக்கும் வாழ்க்கைநிதர்சனங்கள் அந்த முனுமுனுப்புகளை அமுக்கி விடும்.

சமீப காலமாக படத் தயாரிப்பிலிருந்து விலகி சின்னத் திரைத் தொடர்களை இயக்கி வரும் பாலச்சந்தர் மீண்டும்வெள்ளித் திரைக்குத் திரும்பி வருகிறார். இந்தப் படம் அவருக்கு 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.பார்த்தாலே பரவசம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஹீரோவாக மாதவனும், ஹீரோயினாகஸ்நேகாவும் நடிக்கிறார்கள்.

பாலச்சந்தரின் முழுப் பரிமாணத்தையும் இந்தப் படத்தில் காணலாம் என்று கவிதாலயா வட்டாரத்தில்பேசப்படுகிறது. தனது முத்திரையை கொஞ்சம் அழுத்தமாகவே பதிக்க விரும்புவதால், இந்தப் படம் பாலச்சந்தருக்குமுத்திரைப் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கெஸ்ட்ரோலில் ரஜினி, கமல்:

பார்த்தாலே பரவசம் படத்தில் இன்னொரு விசேஷமும் உள்ளது. பாலச்சந்தரால் பட்டை தீட்டப்பட்டு, அகில இந்தியஅளவில் சினிமாவில் விலக்க முடியாத நபர்களாக மாறி விட்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் மற்றும் கமல்ஹாசன்ஆகியோர் இந்தப் படத்தில் கெஸ்ட் ரோல்களில் வருகிறார்கள்.

தனது இரு சீடர்களையும் தனது 100-வது படத்தில் தலை காட்ட வேண்டும் என்று பாலச்சந்தர் விரும்பியதால் இருசூப்பர் ஸ்டார்களும் குருவின் படத்தில் நடிக்கிறார்கள். அவர்களது ரோல் என்ன என்று தெரியாவிட்டாலும் கூடஅழுத்தமான பாத்திரத்தில் அவர்கள் வருவார்கள் என்று தெரிகிறது.

பல்வேறு பிரச்சினைகளினால் பட இயக்கத்திலிருந்து விலகியிருந்த பாலச்சந்தர் மீண்டும், வீறு கொண்டு எழுந்துவருவது அவருக்கு மட்டும் நல்லதல்ல, நல்ல சினிமாவை நேசிக்கும் திரை ரசிகர்களுக்கும் சந்தோஷமானவிஷயம்தான்.

பாலச்சந்தரின் ஹை-டெக் ஸ்டுடியோ

பாலச்சந்தர் சென்னையில் சகல வசதிகளுடன் கூடிய ஸ்டுடியோவைக் கட்டி வருகிறார்.

ரூ. 10 கோடி முதலீட்டில் சென்னை தியாகராய நகரில் பிரமாண்டமான முறையில் உருவாகிவரும் இந்த ஸ்டுடியோவில் அதி நவீன வசதிகளுடன் கூடிய படப்பிடிப்புத் தளங்கள்,ஒளி,ஒலிப்பதிவு கருவிகள் என அட்டகாசமான வசதிகள் உள்ளதாம்.

சின்னத் திரை தொடர்கள் தயாரிப்பில் பிஸியாக இருக்கும் பாலச்சந்தரின் மின் பிம்பங்கள்நிறுவனம் இனிமேல் இந்த ஸ்டுடியோவில்தான் ஷூட்டிங் முழுவதையும் நடத்தவுள்ளது.திரைப்பட படப்பிடிப்புக்கும் இந்த ஸ்டுடியோவைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில்வசதிகள் உள்ளதாம்.

இந்த அதி நவீன ஸ்டுடியோ திறப்பு விழா விரைவில் அரங்கேற உள்ளதாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil