»   »  கேரளா-தமிழ் படங்களுக்கு தடை ரத்து!

கேரளா-தமிழ் படங்களுக்கு தடை ரத்து!

Subscribe to Oneindia Tamil
Vikram with Trisha

தமிழகத்தில் திரையிடப்படும் அதே நேரத்தில் கேரளாவிலும் தமிழ்ப் படங்களை திரையிட விதிக்கப்பட்டிருந்த தடையை கேரள விநியோகஸ்தர்கள் சங்கம் விலக்கிக் கொண்டுள்ளது.

தமிழகத்தில் வெளியாகும் அதே நாளில் கேரளாவிலும் தமிழ்ப் படங்களை வெளியிட கேரள விநியோகஸ்தர்கள் சங்கம் தடை விதித்தது. இதனால் அஜீத்தின் பில்லா, கேரளாவில் வெளியாக முடியாத நிலை ஏற்பட்டது.

இந்தப் பிரச்சினை குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில், கேரள விநியோகஸ்தர்கள் சங்கத்துடன் பேச்சு நடத்தியது. இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து தங்களது தடையை கேரள விநியோகஸ்தர்கள் சங்கம் விலக்கிக் கொண்டுள்ளது.

அதன்படி இந்த மாதம் முதல் தமிழகத்தில் வெளியாகும் தமிழ்ப் படங்கள் ஒரே நேரத்தில் கேரளாவிலும் திரையிடப்படும். மேலும் அதிக அளவிலான பிரிண்டுகளை போட்டுக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பொங்கலுக்கு தமிழகத்தில் வெளியாகவுள்ள விக்ரமின் பீமா, மாதவனின் வாழ்த்துகள் ஆகிய படங்கள் கேரளாவிலும் திரையிடப்படவுள்ளன.

மேலும் முதல் முறையாக பெரிய பட்ஜெட் தமிழ்ப் படங்களை குறைந்தபட்ச உத்தரவாத அடிப்படையில் திரையிடவும் கேரள விநியோகஸ்தர்கள் சங்கம் முன்வந்துள்ளதாம்.

வெல்டன் சேட்டன்ஸ்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil