»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மகசேசே விருது பெற்ற போலீஸ் அதிகாரியான "திகார் ஜெயில் புகழ் கிரண்பேடி தேசியக் கொடியை மதிக்கும் ஒரு குப்பை பொறுக்கும் தொழிலாளியாகஒரு படத்தில் நடிக்கிறார்.

சென்னையைச் சேர்ந்த மலர் நெட்வொர்க் என்ற நிறுவனம் தயாரிக்கும் ‘ஒரு உண்மையான மரியாதை’ என்ற 10 நிமிட நேரகுறும்படத்தில், குப்பை பொறுக்கும் பெண்ணாக வரும் அவர் குப்பைத் தொட்டியில் கிடந்த தேசியக் கொடியைஎடுத்து அதன் கிழிந்த பகுதியை தனது சேலையின் ஒரு பகுதியை கிழித்து அதனுடன் சேர்த்து தைக்கிறார்.

பின் அந்த கொடியை ஏற்றி அதற்கு மரியாதை செலுத்துகிறார். "என்னுடைய நாட்டின் மேன்மையே எனதுமேன்மை, எனது தாயின் மணிக்கொடியின் பெருமையைக் காப்பதற்காக எனது ஆடையை அளிப்பது என்னுடையபாவங்களைப் போக்கும்" என்ற பாடல் வரிகள் பின்னணியில் ஒலிக்க அதற்கு இசையமைத்திருப்பவர் இசைஞானிஇளையராஜா. குணா-சக்தி ஆகியோர் இதை இயக்குகிறார்கள்.

தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இது தயாரிக்கப்படுகிறது. இந்தக்குறும்படத்தின் கதையை கேட்டதும் கண்கலங்கிய கிரண் பேடி, சுதந்திரத்திற்காக விடுதலைப் போராட்ட வீரர்கள்செய்த தியாகத்தை மறந்த இன்றைய இளைய சமுதாயத்திற்கு நாட்டுப்பற்றின் அவசியத்தை எடுத்துச்சொல்வதற்காகவே தான் இவ்வேடத்தை ஏற்றதாகக் கூறுகிறார்.

சேலை அணிவது பெண் அடிமைத்தனத்தின் அடையாளம் எனக் கருதும் பேடி இப்படத்தில் சேலை அணிந்துநடித்துள்ளார்.

இப்படத்தின் கதை ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது எனக் கூறும் தயாரிப்பாளர்கோபால்ஜி, இப்படத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் பாதி, தெருவோரக் குழந்தைகளுக்காக பேடி நடத்திவரும் இந்தியா விஷன் ஃபவுண்டேஷனுக்கு அளிக்கப்படும் என்றார்.

படத்தின் கதாபாத்திரம் குறித்து குணா கூறுகையில், முதலில் அன்னை தெரசாவை நடிக்க வைக்கவேவிரும்பினோம். ஆனால் அவர் உயிருடன் இல்லாததால், கிரண் பேடியை அணுகினோம். பெண் அடிமைத்தனத்தின்அடையாளமாக சேலை கருதப்படுகிறது. ஆனால் அதை பொய் என்று கூறும் வகையில், சேலை அணிந்து நடிக்கபேடி ஒத்துக் கொண்டார்.

யு.என்.ஐ.

Read more about: film, kiran bedi, national flag

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil