»   »  பீமாவை பிடித்த சன்!

பீமாவை பிடித்த சன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விக்ரம், திரிஷாவின் உருட்டல் நடிப்பில் உருவாகியுள்ள பீமா படத்தின் உரிமையை சன் டிவி பெரும் தொகை கொடுத்து வாங்கியுள்ளதாம்.

படத்தை வாங்கிக் குவிப்பதில் சன் டிவியின் ஆதிக்கமே கொஞ்ச காலத்திற்கு முன்பு வரை படு ஜோராக இருந்தது. சன் டிவியைத் தவிர வேறு யாருக்குமே முன்னணி நட்சத்திரங்களின் படம் கிடைக்காது என்ற நிலையும் நிலவியது.

இந்த நிலையை சமீபத்தில் அறிவிக்கப்பட்ட கலைஞர் டிவி உடைந்தது. டிவியே இன்னும் ஆரம்பிக்கப்படாத நிலையில், தசாவதாரம், சிவாஜி உள்ளிட்ட பெரிய படங்களை வாங்கிக் குவித்தது கலைஞர் டிவி.

கலைஞர் டிவி இப்படிக் கலக்கிக் கொண்டிருக்க மறுபக்கம் சன் டிவி அடுத்த கட்ட நடிகர்களின் படங்களை வாரி இழுக்க ஆரம்பித்துள்ளது. போக்கிரி, கிரீடம் ஆகிய படங்களை வாங்கிய சன் டிவி இப்போது விக்ரமின் பீமா படத்தை வாங்கியுள்ளது.

கலைஞர் டிவி சிவாஜி படத்திற்குக் கொடுத்த தொகைக்கு சற்று இணையான தொகை கொடுத்து பீமாவை வாங்கியுள்ளதாம் சன் டிவி.

விக்ரம், திரிஷா நடிப்பில், லிங்குச்சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பீமா. பல்வேறு காரணங்களால் நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்து வந்த பீமா, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம். ஏ.எம். ரத்னம் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.

ரத்னத்திற்கு சன் டிவியுடன் நெருங்கிய நட்பு இருப்பதால் கலைஞர் டிவியைக் கண்டுகொள்ளாமல் சன் டிவிக்கே பீமாவை விற்று விட்டதாக கூறப்படுகிறது.

சன் டிவி பீமாவை வாங்கி விட்டதைக் கேள்விப்பட்டு கலைஞர் டிவி தரப்பு கடுப்பாகியுள்ளதாம். புதிதாக உருவாகி வரும் அத்தனை படத்தையம் வாங்கி விட பொட்டிகளை அடுக்கி எடுத்துக் கொண்டு கிளம்பியுள்ளனராம்.

எங்க போய் முடியுமோ?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil