»   »  படமாகிறது பெனாசிர் வாழ்க்கை

படமாகிறது பெனாசிர் வாழ்க்கை

Subscribe to Oneindia Tamil
Benazir Bhutto with husband Asif Ali Zardari

படுகொலை செய்யப்பட்ட பெனாசிர் பூட்டோவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. அதிலும் ஒரே நேரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த இயக்குநர்கள் தனித் தனியாக பெனாசிர் வாழ்க்கையைப் படமாக்கத் திட்டமிட்டுள்ளனர்.

பரபரப்பான சம்பவம் ஏதேனும் நடந்தால் அதை திரைப்படமாக்கி விடுவது உலக திரையுலக வரலாற்றில் சகஜமானதுதான். அந்த வகையில் தற்போது பெனாசிர் பூட்டோவின் வரலாறும் திரைப்படமாகப் போகிறது.

பாகிஸ்தானைச் சேர்ந்த நாடக இயக்குநர் தாரிக் அலியும், இந்தியாவைச் சேர்ந்த பிரபல இயக்குநர் மகேஷ் பட்டும் பெனாசிர் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கவுள்ளனர். இருவரும் தனித் தனியே இப்படத்தை உருவாக்கவுள்ளனர்.

தாரிக் அலி இயக்கும் படத்தில் பெனாசிர் வேடத்தில் ஷபானா ஆஸ்மி நடிக்கவுள்ளாராம். இதுகுறித்து ஷபானா ஆஸ்மி கூறுகையில், நான் பெனாசிரை இருமுறை சந்தித்துப் பேசியுள்ளேன்.

என்னிடம் அரசியல் அனுபவங்கள் குறித்து கேட்டறிந்தார். அதை இப்போது பெருமையாக நினைக்கிறேன். மேலும் அவரது வேடத்தில் நடிப்பதை மேலும் பெருமையாக கருதுகிறேன் என்றார் பெனாசிர்.

அதேபோல, பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு படத் தயாரிப்பாளர், இயக்குநர் மகேஷ் பட்டை வைத்து பெனாசிர் வரலாற்றைப் படமாக்கத் திட்டமிட்டுள்ளார்.

இந்தப் படத்தில் பெனாசிர் வேடத்தில் பிரபல நடிகை ஒருவரை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாம். பட ஷூட்டிங்கை பாகிஸ்தானிலேயே நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாம்.

ஒரே தலைவரின் வாழ்க்கை வரலாற்றை இரு வேறு இயக்குநர்கள் ஒரே நேரத்தில் உருவாக்கவுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil