»   »  2007ன் 'தங்கமான' படங்கள்!

2007ன் 'தங்கமான' படங்கள்!

Subscribe to Oneindia Tamil
Sathyaraj with Kushboo
2007ல் ரஜினி முதல் அஜீத் வரை சூப்பர் ஸ்டார் நடிகர்களின் படங்கள் வெளியாகி கலக்கின என்றாலும், இவற்றோடு எந்த ரீதியிலும் கலக்காமல், தனித்து நின்று தங்கமான படங்கள் என்ற பெயரை இரு படங்கள் பெற்றுள்ளன.

ஒன்று பெரியார். சத்யராஜ் இதுவரை இல்லாத அளவுக்கு மிக மிக நேர்த்தியாக, தத்ரூபமாக, இயல்பாக பெரியார் வேடத்தில் நடித்திருந்த பெரியார், இந்த ஆண்டின் மிகச் சிறந்த படங்களில் ஒன்று.

நிஜப் பெரியாரை பார்த்தது போலவே இருந்ததாக கலைஞர் கருணாநிதியே சத்யராஜின் நடிப்பைப் பார்த்து வியந்து பாராட்டினார்.

தமிழக அரசின் நிதியுதவியோடு உருவான பெரியார், தமிழம் முழுவதும் இளம் தலைமுறையினருக்கு தந்தை பெரியாரின் சமூக போராட்டங்கள், புரட்சிக் கருத்துக்களை புரிந்து கொள்ளவும், அறிந்து கொள்ளவும் நல்ல வாய்ப்பாக அமைந்தது.

கவர்ச்சிகரமான நடிகையாகவே பார்க்கப்பட்ட குஷ்பு முதல் முறையாக மணியம்மை என்ற புரட்சிகர பெண்ணின் கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த திரை ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார், பாராட்டுக்களையும் வாங்கிக் குவித்தார்.

அடுத்த தங்கம், தங்கர் பச்சானின் ஒன்பது ரூபாய் நோட்டு.

தங்கர்பச்சான் இதுவரை இயக்கியுள்ள படங்களிலேயே தங்கமான படம் என்றால் அது ஒன்பது ரூபாய் நோட்டுதான். இந்தப் படத்திலும் சத்யராஜ் வாழ்ந்து காட்டியிருந்தார்.

மாதவர் படையாச்சி வேடத்தில் அவர் நடிக்கவில்லை, மாறாக, வெள்ளந்தி கிராமத்து ஆசாமியாகவே மாறிப் போயிருந்தார்.

இயல்பான நடிப்பு, எதார்த்தமான வசனங்கள், வலிக்காத இசை என பல நல்ல விஷயங்கள், நாம் தொலைத்துக் கொண்டிருக்கும் நமது வாழ்க்கையை புட்டுப் புட்டு வைத்திருந்தார் தங்கர்.

இந்த ஆண்டின் இமயப் படங்களில் நிச்சயம் ஒன்பது ரூபாய் நோட்டுக்கும் தனி இடம் உண்டு என்றால் சந்ேதகமே இல்லை.

எந்தவித மசாலாத்தனமும் இல்லாமல், வசூலைக் குறிக்கோளாக கொள்ளாமல், செயற்கைப் பூச்சுக்கள் இல்லாமல், மக்களுக்காக எடுக்கப்பட்ட படங்கள் இவை.

எனவே இவற்றை 'சூப்பர் ஹிட்' படங்கள் என்ற வரிசையில் சேர்ப்பதை விட, தனித்துவம் கொண்ட படங்களாக, மக்களுக்கான படங்களாக தனித்து விடுவதே இந்தப் படங்களுக்குப் பெருமை.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil