»   »  மீண்டும் 'புதிய வார்ப்புகள்'

மீண்டும் 'புதிய வார்ப்புகள்'

Posted By:
Subscribe to Oneindia Tamil
Shanthanu
அந்தக் காலத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற பாரதிராஜாவின் புதிய வார்ப்புகள், மீண்டும் உருவாகிறது. ஆனால் இந்த முறை படத்தின் தலைப்பு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

பாரதிராஜா இயக்க, பாக்யராஜ், சந்திரசேகர் நடிப்பில் உருவாகி பெரும் வெற்றி பெற்ற படம் புதிய வார்ப்புகள். அப்போது பாக்யராஜ், பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தார்.

1979 ம் ஆண்டு வெளியான புதிய வார்ப்புகள் படத்தின் பெயரை மட்டும் பயன்படுத்தி புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார் பாக்யராஜ். இப்படத்தில் பாக்யராஜின் மகன் சாந்தனுதான் நாயகன்.

புதிய வார்ப்புகள் என்ற பெயரை பயன்படுத்திக் கொள்ளலாமா என்று பாரதிராஜாவிடம் பாக்யராஜ் அனுமதி கேட்டபோது, அதற்கென்ன, தாராளமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டாராம் பாரதிராஜா.

லேட்டஸ்ட் புதிய வார்ப்புகள் குறித்து பாக்யராஜ் கூறுகையில், மோசர்பெயர் நிறுவனத்துடன் இணைந்து எனது கே.பி.ஆர். மீடியாஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதி இயக்குகிறேன்.

எனது மகன் சாந்தனு ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக புதுமுகம் சாந்தினி நடிக்கவுள்ளார். முதலில் பல பெயர்களை இப்படத்திற்காக யோசித்தோம். ஆனால் புதிய வார்ப்புகள் என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது.

குருநாதரிடம் கேட்டேன், பயன்படுத்திக் கொள் என்றார். எனவே புதிய வார்ப்புகள் என்ற பெயரில் இப்படம் உருவாகிறது என்றார் பாக்யராஜ்.

தற்போது சக்கரக்கட்டி என்ற படத்தில் சாந்தனு நாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படம் விரைவில் முடியும் என்று தெரிகிறது. புதிய வார்ப்புகள் படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்குகிறதாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil