twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    22 முதல் தமிழ்த் திரை டிவி ஒளிபரப்பு நீண்...ட.. காலமாக பேசப்பட்டு வரும் தமிழ்த் திரை தொலைக்காட்சியின் ஒளிபரப்பு வரும் 22ம் தேதி முதல் தொடங்கும் என்றுஇயக்குனர் பாரதிராஜா அறிவித்துள்ளார்.தமிழ் திரைப்படத் துறையின் பல்வேறு அமைப்புகள் இணைந்து தமிழ்த் திரை என்ற பெயரில் தொலைக்காட்சியைஆரம்பித்துளளன. ஆனால், தொலைக்காட்சியின் ஒளிபரப்பு இந்தா.. இந்தா.. என்று மாதக் கணக்கில் தள்ளிப் போய்க் கொண்டேஇருக்கிறத.இந் நிலையில் தமிழ்த்திரை தொலைக்காட்சியின் தலைவரான பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழ்த் திரைப்படத் துறையின் ஒருமித்த ஒத்துழைப்பாலும், கேபிள் டிவி உரிமையாளர்களின் உறுதியான ஆதரவினாலும், ஒருசெயற்கைக் கோள் தொலைக்காட்சியை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனை கடந்த சில ஆண்டுகளாக உருவாகி, அது பல்வேறுமுயற்சிகளுக்கிடையில் முற்றிலும் புதுமையான தொலைக்காட்சியாக வடிவம் பெற்று தமிழ்த் திரை தொலைக்காட்சி,ஒளிபரப்பாக உள்ளது.பண்டைய தமிழ்க் கலைப் படைப்புகள், தமிழிசை, தெருக்கூத்து, நாடகங்கள் மற்றும் இன்றைய நவீன இலக்கியங்கள் அனைத்தும்மாறுபட்ட உள்ளடக்கத்தோடும், பல்வேறு புதுமையான நிகழ்ச்சிகளையும், திரைப்படங்கள், திரைப்படக் காட்சிகள்,நகைச்சுவைப் பகுதிகள் அனைத்தும் புதிய கோணத்தோடும், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஒவ்வொருவரிடத்திலும்மறைந்து கிடக்கும் உணர்ச்சிகளை பிரதிபலிக்கின்ற, அவர்களின் கலாச்சாரத்தை, பண்பாட்டை, பாதுகாக்கின்ற உறைவாளாகஇருக்கும்.பாங்காக்கிலிருந்து தாய்க்காம்-3 செயற்கைக் கோள் வழியாக வரும் 15ம் தேதி முதல் முன்னோட்ட ஒளிபரப்பு தொடங்கவுள்ளது.அதன் பின்னர் 22ம் தேதி முதல் நிகழ்ச்சிகளோடு எழுச்சிகரமாக தொடங்கவுள்ளது.இந்திய துணைக் கண்டம் மட்டுமல்லாது, ஆசிய, ஐரோப்பிய, ஆஸ்திரேலிய மற்றும் மத்திய வளைகுடா நாடுகள் உள்பட 110நாடுகளில் உள்ள உலகத் தமிழர்களின் இல்லங்களில் ஒளிபரப்பாக உள்ளது.தமிழகத்தில் எஸ்.சி.வி மூலம் தமிழ்த் திரைத் தொலைக்காட்சி ஒளிபரப்பாகும். இதற்காக கலாநிதி மாறனை சந்தித்துப்பேசியுள்ளேன். அதேபோல, விரைவில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனையும் சந்தித்துப் பேசவுள்ளேன்.உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழ்த் திரை தொலைக்காட்சிக்கு தங்களது மனப்பூர்வமான ஆதரவை தர வேண்டும். இதுவரைஆதரவு தந்து வரும் அனைத்துத் தரப்பினருக்கும் எனது நன்றிகள் என்று கூறியுள்ளார் பாரதிராஜா.

    By Staff
    |

    நீண்...ட.. காலமாக பேசப்பட்டு வரும் தமிழ்த் திரை தொலைக்காட்சியின் ஒளிபரப்பு வரும் 22ம் தேதி முதல் தொடங்கும் என்றுஇயக்குனர் பாரதிராஜா அறிவித்துள்ளார்.

    தமிழ் திரைப்படத் துறையின் பல்வேறு அமைப்புகள் இணைந்து தமிழ்த் திரை என்ற பெயரில் தொலைக்காட்சியைஆரம்பித்துளளன. ஆனால், தொலைக்காட்சியின் ஒளிபரப்பு இந்தா.. இந்தா.. என்று மாதக் கணக்கில் தள்ளிப் போய்க் கொண்டேஇருக்கிறத.

    இந் நிலையில் தமிழ்த்திரை தொலைக்காட்சியின் தலைவரான பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்த் திரைப்படத் துறையின் ஒருமித்த ஒத்துழைப்பாலும், கேபிள் டிவி உரிமையாளர்களின் உறுதியான ஆதரவினாலும், ஒருசெயற்கைக் கோள் தொலைக்காட்சியை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனை கடந்த சில ஆண்டுகளாக உருவாகி, அது பல்வேறுமுயற்சிகளுக்கிடையில் முற்றிலும் புதுமையான தொலைக்காட்சியாக வடிவம் பெற்று தமிழ்த் திரை தொலைக்காட்சி,ஒளிபரப்பாக உள்ளது.

    பண்டைய தமிழ்க் கலைப் படைப்புகள், தமிழிசை, தெருக்கூத்து, நாடகங்கள் மற்றும் இன்றைய நவீன இலக்கியங்கள் அனைத்தும்மாறுபட்ட உள்ளடக்கத்தோடும், பல்வேறு புதுமையான நிகழ்ச்சிகளையும், திரைப்படங்கள், திரைப்படக் காட்சிகள்,நகைச்சுவைப் பகுதிகள் அனைத்தும் புதிய கோணத்தோடும், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஒவ்வொருவரிடத்திலும்மறைந்து கிடக்கும் உணர்ச்சிகளை பிரதிபலிக்கின்ற, அவர்களின் கலாச்சாரத்தை, பண்பாட்டை, பாதுகாக்கின்ற உறைவாளாகஇருக்கும்.

    பாங்காக்கிலிருந்து தாய்க்காம்-3 செயற்கைக் கோள் வழியாக வரும் 15ம் தேதி முதல் முன்னோட்ட ஒளிபரப்பு தொடங்கவுள்ளது.அதன் பின்னர் 22ம் தேதி முதல் நிகழ்ச்சிகளோடு எழுச்சிகரமாக தொடங்கவுள்ளது.

    இந்திய துணைக் கண்டம் மட்டுமல்லாது, ஆசிய, ஐரோப்பிய, ஆஸ்திரேலிய மற்றும் மத்திய வளைகுடா நாடுகள் உள்பட 110நாடுகளில் உள்ள உலகத் தமிழர்களின் இல்லங்களில் ஒளிபரப்பாக உள்ளது.

    தமிழகத்தில் எஸ்.சி.வி மூலம் தமிழ்த் திரைத் தொலைக்காட்சி ஒளிபரப்பாகும். இதற்காக கலாநிதி மாறனை சந்தித்துப்பேசியுள்ளேன். அதேபோல, விரைவில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனையும் சந்தித்துப் பேசவுள்ளேன்.

    உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழ்த் திரை தொலைக்காட்சிக்கு தங்களது மனப்பூர்வமான ஆதரவை தர வேண்டும். இதுவரைஆதரவு தந்து வரும் அனைத்துத் தரப்பினருக்கும் எனது நன்றிகள் என்று கூறியுள்ளார் பாரதிராஜா.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X