»   »  காதலரை மணந்தார் நடிகை பாவனா: ரசிகர்கள் வாழ்த்து

காதலரை மணந்தார் நடிகை பாவனா: ரசிகர்கள் வாழ்த்து

Posted By:
Subscribe to Oneindia Tamil
காதலரை மணந்த நடிகை பாவனா.. ரசிகர்கள், திரையுலகினர் வாழ்த்து

திருச்சூர்: நடிகை பாவனாவுக்கும், கன்னட தயாரிப்பாளரான நவீனுக்கும் திருச்சூரில் இன்று திருமணம் நடைபெற்றது.

நடிகை பாவனாவும், கன்னட பட தயாரிப்பாளரான நவீனும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது.

இதையடுத்து இன்று திருமணம் நடந்துள்ளது.

 திருமணம்

திருமணம்

பாவனா, நவீன் திருமண நிகழ்ச்சி கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள லுலு கன்வென்ஷன் சென்டரில் இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இருவீட்டார், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

பாவனா

பாவனா

இன்று மாலை லுலு கன்வென்ஷன் சென்டரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அந்த நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள்.

வாழ்த்து

காதலரை கரம் பிடித்த நடிகை பாவனாவுக்கு அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இன்று போன்று என்றும் துணிச்சலாக இருக்குமாறு கூறியுள்ளனர்.

 மஞ்சு வாரியர்

மஞ்சு வாரியர்

திருமண நிகழ்ச்சியில் பாவனாவின் நெருங்கிய தோழிகளான நடிகைகள் மஞ்சு வாரியர், ரம்யா நம்பீசன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக நடந்த மெஹந்தி நிகழ்ச்சியில் ரம்யா கலந்து கொண்டார்.

கல்யாணம்

பாவனா, நவீன் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பாவனாவை மணக்கோலத்தில் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

English summary
Bhavana has tied the knot with Kannada film producer, Naveen, who has been a longtime friend of the South Indian actress. They have known each other since the past 5 years and they had got engaged on March 9, 2017, in a function which was also held in Thrissur.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil