»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பூமிகா சாவ்லா என்ற ஒரிஜினல் பெயர் கொண்ட பூமிகா, வட நாட்டில் இருந்து தெலுங்கு மூலமாக தமிழுக்கு வந்தார்.

தமிழில் ரோஜாக் கூட்டம் படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து விஜய்குக்கு ஜோடியாக பத்ரி படத்தில் நடித்தார். தமிழில் ஒரு கலக்குகலக்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் தெலுங்குக்கே திரும்பிப் போனார்.

அங்கு தமிழை விட நல்ல சம்பளம் ஓல்டு, இளசு என்றெல்லாம் பார்க்காமல் எல்லா ஹீரோக்களுடனும் விளையாடி முடித்துவிட்டு இப்போது தன் சொந்தஊரான வட தேசத்துக்கே புலம் பெயர்ந்திருக்கிறார்.

பூமிகாவின் நெகு நெகு உயரம், ஸ்லிம் உடல் வாகுக்கு இப்போது பாலிவுட்டில் செம வரவேற்பாம். முதலில் இந்தியில் துண்டு துக்கடா வேடங்கள்மட்டுமே தந்தார்கள். இதனால் தான் வெறுத்துப் போய் தெலுங்குக்கு வந்தார்.

இப்போது, பாலிவுட்டில் நல்ல சம்பளத்துக்கு முக்கிய வேஷம் கட்டி நடிக்க அழைப்பதால், தெலுங்குப் பட அனுபவத்தை வைத்துக் கொண்டு கவர்ச்சியில் குறைவைக்காமல் மும்பை சினிமா வாலாக்களை நல்லபடியாக திருப்திபடுத்தி வருகிறார்.

முதலில் சல்மான்கானுடன் நடித்த தேரே நாம் (சேது படத்தின் ரீமேக்) அங்கே சூப்பர் ஹிட். அடுத்து அபிஷேக்பச்சனுடன் நடித்த ரன் (நம்ம ரன் படத்தின்ரீமேக்) சுமாராகவே போனாலும் பூமிகாவிற்கு அங்கு வாய்ப்புகள் குறையவில்லை.

படங்களுக்கு இடையே இந்தி ஆல்பங்களில் தலை காட்டவும் ஆர்வம் காட்டுகிறார் (எல்லாம் பணம் தான் காரணம்). இப்போது, அட்னான் சமியின்ஆல்பத்தில் ஒரு பாடலுக்கு ஆட வாய்ப்பு கிடைத்துள்ளது. அட்னன், யார் என்று தெரியாதவர்களுக்கு ஒரு குறிப்பு: தமிழில் பாய்ஸ் படத்தில் பூம் பூம் பாடலைபாடியவர்.

இவரது இந்தி ஆல்பங்களில் நடிப்பதை இந்தி நடிகைகள் மணிரத்னம், ராஜ்குமார் சந்தோஷி படத்தில் நடிப்பதற்கு சமமாக கருதுகிறார்கள். ராணி முகர்ஜி,ரவீணா டாண்டன், நம்ரதா சிரோத்கர், மகிமா செளத்ரி, அமீஷா படேல் என பிரபல நடிகைகள் அனைவரும் இவரது ஆல்பத்தில்தலைகாட்டியிருக்கிறார்கள்.

இப்போது அந்த வரிசையில் இடம் பெறும் அதிர்ஷ்டம் பூமிகா சாவ்லாவிற்கு வாய்த்திருக்கிறது.

இந்தி சினிமா, இந்தி ஆல்பம் என்று பிஸியாகிவிட்ட பூமிகா இனிமேல் தமிழ், தெலுங்குப் பக்கம் வர வாய்ப்பு குறைவுதானாம்.

ஒரு ஆப்பிள் பெண்ணை நாம இழந்துட்டோமே...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil