»   »  அமிதாப்புக்கு வயது 65

அமிதாப்புக்கு வயது 65

Subscribe to Oneindia Tamil


'பிக் பி' என பாலிவுட் ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் அமிதாப் பச்சன் இன்று தனது 65வது பிறந்த நாளை கொண்டாடினார்.

Click here for more images

அமிதாப்பின் ரசிகர்களும், வட இந்திய தொலைக் காட்சிகளும், அமிதாப்பின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடின. அதேசமயம், மும்பையில் உள்ள தனது இல்லத்தில் எளிமையாக பிறந்த நாளைக் கொண்டாடினார் அமிதாப்.

இன்று படப்பிடிப்பு எதிலும் அமிதாப் கலந்து கொள்ளவில்லை. காலையில் தனது வீட்டுக்கு அருகே உள்ள ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்தார். அமிதாப்பின் வீட்டின் முன்பு காலை முதலே பெரும் திரளான ரசிகர்கள் கூடியிருந்தனர். பத்திரிக்கையாளர்கள் கூட்டத்திற்கும் பஞ்சமே இல்லை.

அமிதாப்பின் இந்த ஆண்டு பிறந்த நாளில் இரண்டு விசேஷங்கள் இடம் பெற்றிருந்தன. மகன் அபிஷேக் கல்யாணமாகி தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் பிறந்த நாள் வாழ்த்து கூறியது ஒன்று.

இன்னொன்று, அவர் நடித்த பிளாக் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது. இதன் காரணமாக இன்றைய பிறந்த நாளை அமிதாப் குடும்பத்தினர் இரட்டிப்பு சந்தோஷத்துடன் கொண்டாடினர்.

அமிதாப் நடித்த ஏக்லவ்யா, நிஷப்த், ஆக் ஆகிய படங்கள் சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்ட படங்களாகும். ஆனால் மூன்று படங்களுமே ஹிட் ஆகத் தவறிய தோல்விப் படங்கள் என்பதுதான் அமிதாப்பை அப்செட் செய்த இந்த ஆண்டின் முக்கிய விஷயம்.

தற்ேபாது அமிதாப் பச்சன், பூத்நாத், சர்க்கார்ராஜ் (மகனும், மருமகளும் இதில் உடன் நடிக்கிறார்கள்), கங்கோத்ரி என்ற போஜ்பூரி படம் ஆகியவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Read more about: bachan
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil