»   »  மலையாளத்தில் அமிதாப்

மலையாளத்தில் அமிதாப்

Subscribe to Oneindia TamilClick here for more images
இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மலையாளப் படத்தில் நடிக்கவுள்ளார்.

பெரும்பாலும் இந்திப் படங்களில் மட்டுமே நடித்துள்ள அமிதாப் பச்சன் வேறு மொழிப் படங்களில் மிகவும் குறைவாகவே நடித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கன்னடப் படத்தில் நடித்திருந்தார். தமிழில் அவர் நடிக்க இன்னும் காலம் கை கூடவில்லை. சிவாஜியில் அவர் நடித்திருக்க வேண்டியது. ஆனாலும் அவருக்குப் பதில் கடைசியில் ரகுவரனை நடிக்க வைத்தனர்.

இந்த நிலையில், மலையாளத்தில் பச்சன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை வினயன் இயக்கவுள்ளார். இந்தப் படத்திற்கு இதுவரை பெயரிடவில்லை. சதீஷ் நாயர் தயாரிக்கவுள்ளார்.

ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாக இப்படத்தில் நடிக்கவுள்ளாராம் அமிதாப் பச்சன். இப்படத்தில் மலையாளம் மற்றும் தமிழில் புகழ் பெற்ற பிரபல நடிகர்கள் ஐந்து பேரும் நடிக்கவுள்ளனராம்.

இதுகுறித்த வினயனிடம் கேட்டபோது, இப்படத்தில் நடிக்க அமிதாப் பச்சன் ஆர்வமாக உள்ளார். நான் கதையை சில மாதங்களுக்கு முன்பு சொன்னபோதே அவர் ஆர்வமாகி விட்டார். மற்ற கலைஞர்கள் குறித்து விவாதித்து வருகிறோம். தற்போது நடித்து வரும் சில படங்களை முடித்த பின்னர் அமிதாப் இந்தப் படத்திற்கு வருகிறார் என்றார்.

வசந்தியும் லட்சுமியும் பின்னே ஞானும் (தமிழில் வந்த சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமியின் ஒரிஜினல் படம் இது), ஆகாசகங்கா, கருமாடிக் குட்டன் (16 வயதினிலே படத்தின் தழுவல் இது - 'சுடல்' என்றும் சொல்லலாம்) உள்ளிட்ட பல படங்களைக் கொடுத்தவர் வினயன்.

தற்போது மலையாளத்தில் ஹரீந்திரன் ஒரு நிஷ்களங்கன் (ஹரீந்திரன் ஒரு நிரபராதி) என்ற படத்தை வினயன் இயக்கி வருகிறார்.

Read more about: amithab

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil