»   »  பில்லா புக்கிங் ஹாட்!

பில்லா புக்கிங் ஹாட்!

Subscribe to Oneindia Tamil
Ajith-Namitha
பில்லா படத்தின் முன்பதிவு படு சூடாக ஆரம்பித்துள்ளது. ஒரு வாரத்திற்கான டிக்கெட்டுக்கள் விற்று விட்டதாம்.

ரஜினியின் சூப்பர் ஹிட் பில்லா, அஜீத் நடிப்பில் ரீமேக் ஆகியுள்ளது. நாளை மறு நாள் (14ம் தேதி) திரைக்கு வருகிறது.

பில்லாவுக்கான டிக்கெட் முன்பதிவு 10ம் தேதி தொடங்கியது. முதல் நாளிலேயே ஒரு வாரத்திற்கான டிக்கெட்டுக்கள் மாலைக்குள் முன் பதிவாகி விட்டதாம்.

முன்பதிவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது, பில்லாவை விநியோகம் செய்யும் உரிமையை வாங்கியுள்ள பிரமீட் சாய்மீரா நிறுவனத்தை குஷியில் ஆழ்ததியுள்ளது.

இந்த நிறுவனம் தீபாவளிக்கு வாங்கி விநியோகித்த அழகிய தமிழ் மகன் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டது. அந்த நஷ்டத்தை அஜீத் படத்தின் மூலம் சரி செய்து விடலாம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாம்.

சென்னையின் பிரமாண்ட திரையரங்கமான சத்யம் தியேட்டரில், முதல் நான்கு நாட்களுக்கான 16 காட்சிகளுக்கும் டிக்கெட் முன்பதிவு முடிந்து விட்டதாம். அபிராமி மெகா மால் வளாகத்திலும் இதே கதைதான்.

தமிழ்நாடு, மும்பை, பெங்களூர் ஆகிய இடங்களில் மொத்தம் 235 பிரிண்டுகளுடன் பில்லா ரிலீஸ் ஆகிறது. வெளிநாடுகளுக்கு 70 பிரிண்டுகளை அனுப்புகின்றனர்.

Please Wait while comments are loading...