»   »  பில்லாவுக்கு 'யு.ஏ' - மிருகத்திற்கு 'ஏ'

பில்லாவுக்கு 'யு.ஏ' - மிருகத்திற்கு 'ஏ'

Posted By:
Subscribe to Oneindia Tamil
Ajith with Nayanatara

அஜீத், நயனதாரா, நமீதாவின் நடிப்பில் உருவாகியுள்ள பில்லா படத்திற்கு யு.ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. சர்ச்சை இயக்குநர் சாமியின் மிருகம் படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாம்.

80களில் வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினியின் சூப்பர் ஹிட் படம் பில்லா. இப்படத்தை அதே பெயரில் அஜீத் நடிக்க ரீமேக் செய்துள்ளார், பில்லாவைத் தயாரித்த ஆனந்தா சுரேஷ்.

பெரும் பொருட் செலவில், மிரட்டலாக உருவாகியுள்ள பில்லாவுக்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைத்து விட்டது. படத்தில் சில காட்சிகளை மட்டும் சென்சார் உறுப்பினர்கள் கட் செய்யுமாறு கூறினாராம். அதை ஏற்று இயக்குநர் விஷ்ணுவர்த்தனும் அந்தக் காட்சிகளை நீக்க சம்மதித்தாராம்.

இதையடுத்து யு.ஏ சான்றிதழ் பில்லாவுக்குக் கிடைத்துள்ளது. ஏற்கனவே ஆடியோ வெளியாகி விட்ட நிலையில் வருகிற 14ம் தேதி உலகெங்கும் பில்லா ரிலீஸ் ஆகிறது.

இதேபோல, சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இயக்குநர் சாமியின் கைவண்ணத்தில் உருவாகியுள்ள மிருகம் படத்திற்கும் தணிக்கைச் சான்றிதழ் கிடைத்து விட்டது. இப்படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள், படம் நன்றாக வந்திருப்பதாக பாராட்டினார்களாம். மேலும் ஒரு காட்சிக்குக் கூட அவர்கள் ஆட்சேபனை சொல்லவில்லையாம்.

மிருகம் படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. மிருகத்தில், பத்மப்பிரியா நடித்துள்ளார். படப்பிடிப்பின்போது, சாமியிடம் கன்னத்தில் அறை வாங்கி பரபரப்பில் சிக்கினார் பத்மப்ரியா. இதுவே படம் குறித்த எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil