»   »  'நெட்'டில் 'துள்ளும்' காளை!!!

'நெட்'டில் 'துள்ளும்' காளை!!!

Subscribe to Oneindia Tamil
Vedhika

நிலா, வேதிகா, சிம்பு நடித்துள்ள காளை படம் இன்னும் தியேட்டர்களுக்கே வராத நிலையில், அப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இணையதளங்களில் ரிலீஸாகி விட்டது. இதேபோல பில்லா படமும் முழுசாக இணையதளத்தில் இலவசமாக கிடைக்கிறது.

இது இன்டர்நெட் காலம். இதை திரையுலகில் இருப்பவர்கள் சரியாக புரிந்து வைத்திருக்கிறார்களோ இல்லையோ, திருட்டுத்தனமாக படங்களையும், பாடல்களையும் சுடுபவர்கள் மிகத் தெளிவாக புரிந்து வைத்துள்ளனர்.

முன்பெல்லாம் திருட்டு வீடியோ புழக்கத்தில் இருந்தது. பின்னர் சிடி வந்தது. இப்போது அதையும் தாண்டி படங்களும், பாடல்களும் அதிகாரப்பூர்வமாக திரைக்கு வரும் முன்பே, இணையதளங்களில் ரிலீஸாகி விடுகிறது.

சிவாஜி படத்தின் பாடல்கள் அதிகாரப்பூர்வமாக ரிலீஸாகும் முன்பே இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் படம் வரும் முன்பே படக் காட்சிகளும் லீக் ஆகின.

சிவாஜியைத் தொடர்ந்து மேலும் பல புதிய படங்களும் அதிகாரப்பூர்வ ரிலீஸுக்கு முன்பே இணையதளங்களில் ரிலீஸாக ஆரம்பித்துள்ளன.

அழகிய தமிழ் மகன் படத்தின் பாடல்கள், படம் வருவதற்கு முன்பே இணையதளத்தில் வெளியானது. இப்போது அஜீத்-நயனதாரா-நமிதாவின் பில்லா, முழுப் படமாக இணையதளங்களில் இலவசமாக கிடைக்கிறது.

அதை விட கொடுமையாக சிம்பு நடித்து இன்னும் வெளிவராத காளை படத்தின் ஆடியோவும் சில இணையதளங்களில் கிடைக்கிறது. அதேபோல பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ள கெட்டவன் படத்தின் ஒரு பாடல் ரிலீஸாகி விட்டது.

சூர்யா நடித்துள்ள வாரணம் ஆயிரம் 2 பாடல்களும் கூட இணையதளத்தில் கிடைக்கிறது. இதில் என்ன விசேஷம் என்றால், பாடல்கள் படு துல்லியமாக இருக்கின்றன.

இதுகுறித்து திரையுலகைச் சேர்ந்த சிலரிடம் கேட்டபோது, இதெல்லாம் பெரிய மேட்டரே கிடையாதுங்க. இப்படியெல்லாம் வராமல் இருந்தால்தான் அதிசயம் என்றனர் நொந்து போய்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil