»   »  பில்லா தள்ளிவைப்பு?

பில்லா தள்ளிவைப்பு?

Posted By:
Subscribe to Oneindia Tamil


விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள பில்லா படம் தீபாவளிக்கு வராது என்று கூறப்படுகிறது. இன்னும் இரு பாடல்களைப் பதிவு செய்ய வேண்டியிருப்பதால் படம் தள்ளிப் போகும் எனக் கூறப்படுகிறது.

Click here for more images

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மெகா ஹிட் படம் பில்லா. இப்படத்தை தற்போது அஜீத்தை வைத்து ரீமேக் செய்துள்ளனர். விஷ்ணுவர்த்தன் இயக்கியுள்ளார். அஜீத்துக்கு ஜோடியாக நமீதா, நயனதாரா நடித்துள்ளனர்.

படம் தீபாவளிக்கு வரும் என முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது படம் தள்ளிப் போகும் எனத் தெரிகிறது. இன்னும் இரு பாடல்களை ஷூட் செய்யவுள்ளதாம். இரு பாடல்களையும் அக்டோபர் 8ம் தேதி முதல் மலேசியாவில் வைத்து படமாக்கவுள்ளனர்.

இதற்கிடையே, பில்லாவை இந்தியாவில் திரையிடும் உரிமையை வாங்க மிகப் பெரிய நிறுவனம் ஒன்று மும்முரமாக முயன்று கொண்டிருக்கிறதாம். தீபாவளிக்கு விஜய்யின் அழகிய தமிழ் மகன், சூர்யாவின் வேல் உள்ளிட்ட படங்கள் ரிலீஸாவதால் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நல்ல தியேட்டர்கள் புக் ஆகி விட்டதால், பில்லாவை டிசம்பரில் திரையிடலாம் என இந்த நிறுவனம், தயாரிப்பாளர் ஆனந்தா சுரேஷிடம் அறிவுறுத்தியுள்ளதாம்.

பில்லாவின் சர்வதேச திரையீட்டு உரிமையை ஈராஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் பெற்றுள்ளதாம். இதே நிறுவனம்தான் ஷாருக்கானின் ஓம் சாந்தி ஓம் படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை ரூ. 75 கோடிக்கு வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஷாருக்கானின் படம் 2000 பிரிண்டுகளுடன் உலகைக் கலக்கவுள்ளது. இத்தனை பிரிண்டுகளுடன் வரும் முதல் இந்தியப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பல பிரபல படங்கள் தீபாவளிக்கு வருவதால் பில்லாவை டிசம்பருக்குத் தள்ளிப் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் வேறு பிரபலங்களின் படங்கள் வராது என்பதால் தனி ஆவர்த்தனமாக கலக்கி விடலாம் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

எப்படியோ, நல்லா வந்தா போதும் பில்லா!

Read more about: ajith billa vishnuvardhan

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil