»   »  பிபாஷாவுக்கு பச்சக் பச்சக்

பிபாஷாவுக்கு பச்சக் பச்சக்

Subscribe to Oneindia Tamil

லிஸ்பனில் நடந்த ஏழு உலக அதிசயங்களைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்தி கிளாமர் க்வீன் பிபாஷா பாசுவுக்கு, முத்த மழை பொழிந்து சலசலப்பை ஏற்படுத்தினார் கால்பந்து ஸ்டார் ரொனால்டோ.

போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் உலகின் 7 புதிய அதியசங்களைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி கடந்த 7ம் தேதி நடந்தது. இதில் முக்கிய விருந்தினர்களாக ரொனால்டோ, இந்தி நடிகை பிபாஷா பாசு, நிலவில் முதலில் காலடி எடுத்து வைத்த ஆம்ஸ்டிராங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஏழு அதிசயங்களை அறிவிக்கும் நிகழ்ச்சி முடிந்த பின்னர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெலிம் கிளப்பில் நடந்த இந்த விருந்தில், பிபாஷாவும் கவர்ச்சிகரமான ஆடையில் கலந்து கொண்டார்.

அவரைப் பார்த்ததும் கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு என்ன ஆனதோ தெரியவில்லை. பிபாஷாவிடம் சிரித்தபடி சென்ற அவர், அப்படியே அவரைப் பிடித்து பச்சக் பச்சக் பச்சக் என சரமாரியாக உதட்டோடு உதடு பொருத்தி முத்த மழை பொழிந்தார்.

கையும், கரண்டியும், வாயுமாக விருந்தில் பிசியாக இருந்தவர்களுக்கு இந்த திடீர் முத்த மழை இனிய அதிர்ச்சியாக இருந்தது. பின்னர் சுதாரித்துக் கொண்டு மறுபடியும் விருந்தில் மூழ்கிப் போயினர்.

இதில் மேட்டர் என்னவென்றால் பிபாஷாவுக்கு வயசு 28. முத்தமிட்ட ரொனால்டோவுக்கு 22தான். இந்த முத்தக் காட்சியை லண்டனிலிருந்து வெளியாகும் டெய்லி ஸ்டார் இதழ் முதல் பக்கத்தில் கலக்கலாக பிரசுரித்துள்ளது.

இப்படியாப்பட்ட கிஸ் குறித்து என்ன சொல்றீங்கோ என்று பாசுவிடம் கேட்டபோது, இதெல்லாம் கேஷுவலாக நடந்த விஷயம். இதைப் போய் ஏன் வேலையில்லாமல் பிரசுரித்தார்கள் என்று தெரியவில்லை. இப்படியெல்லாம் படம் போட்டால் நான் கவலைப்படுவேன் என்று நினைத்து விட்டார்கள் போல என்று படு கேஷுவலாக கூறினார்.

ஒரு படத்தில் வடிவேலு பஞ்சாயத்தில் நிறுத்தப்பட்டிருப்பார். பஞ்சாயத்துத் தலைவராக சங்கிலி முருகன் இருப்பார். பஞ்சாயத்தின் தொடக்கத்தில் சங்கிலி சொல்வார், ஏற்கனவே நம்ம ஊருக்கும், அவங்க ஊருக்கும் வரப்புப் பிரச்சினை இருக்கு, இப்போ வாய்க்கா பிரச்சினையை வேற கொண்டு வந்துட்டானே என்று வடிவேலுவைப் பார்த்து சொல்வார்.

அந்தக் கதையாகத்தான் இருக்கிறது பிபாஷாவின் பச்சக் பச்சக். ஏற்கனவே ஷில்பா ஷெட்டிக்கு, ரிச்சர்ட் கெரே கொடுத்த டான்ஸிங் கிஸ் பஞ்சாயத்து இப்போதுதான் ஓய்ந்தது. இந்த நிலையில் பிபாஷா கிஸ்ஸா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil