»   »  அடடா, பிபாஷா!!

அடடா, பிபாஷா!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிபாஷா பாசு மீது காஸ்மெட்டிக் சர்ஜரி டாக்டர் ஒருவர் கூறியுள்ள குற்றச்சாட்டு பாலிவுட்டில் சூட்டைக் கிளப்பியுள்ளது.

நடிகர், நடிகைகள் காஸ்மெடிக் சர்ஜரி செய்து கொள்வது படு சாதாரணமான விஷயம். முன்பு நடிகை ஸ்ரீதேவி தமிழிலிருந்து இந்திக்குப் போனபோது குண்டாந்தடியாக இருந்த தனது மூக்கை அறுத்து அழகாக்கி காஸ்மெட்டிக் சர்ஜரியை பாப்புலராக்கினார்.

இதுபோல மேலும் சில நடிகைகளும் காஸ்மெட்டிக் சர்ஜரி மூலம் தங்களது உடல் உறுப்புகளை அழகாக்கியுள்ளனர். ஹாலிவுட்டில்தான் இது ரொம்பவும் பிரபலம். ஆனால் இப்போது கோலிவுட், பாலிவுட் என நம்ம ஊரிலும் ரொம்ப பாப்புலராகியுள்ளது.

சில காலத்திற்கு முன்பு நீச்சல் ராக்கி சாவந்த் காஸ்மெட்டிக் சர்ஜரி மூலம் தனது முன்னகை நேர்த்தியாக்கியதாக பகிரங்கமாக கூறி பரவசத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் பிபாஷா பாசுவும் இப்படி ஒரு சர்ஜரியை செய்து எழில் கூட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த சர்ஜரியை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு செய்தார் பிபாஷா.

ஆனால் மேட்டர் என்னவென்றால் அறுவைச் சிகிச்சை செய்து அழகைக் கூட்டிய டாக்டருக்குத் தர வேண்டிய ரூ. 2.5 லட்சம் ஃபீஸை இன்னும் தராமல் இழுத்தடித்து வருகிறாராம் பிபாஷா.

கடந்த 2002ம் ஆண்டு காஸ்மெட்டிக் சர்ஜரி செய்வதில் பிரபலமானவரான டாக்டர் அசோக் குப்தா, பிபாஷாவுக்கு அறுவைச் சிகிச்சை மூலம் முன்னகை எடுப்பாக்கினாராம். வேறு ஒரு பெயரில் குப்தாவின் மருத்துவமனையில் அட்மிட் ஆகி இந்த ஆபரேஷனை செய்து கொண்டாராம் பிபாஷா.

கிட்டத்தட்ட 3 இன்ச் அளவுக்கு பிபாஷாவின் முன்னழகை எடுப்பாக்கி அவரது அழகைக் கூட்டிக் கொடுத்துள்ளார் குப்தா. இந்த அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் பிபாஷா படு அழகாக மாறி விட்டாராம். முன்பை விட கூடுதல் எடுப்புடன் காணப்பட்ட பிபாஷா, அறுவைச் சிகிச்சை மூலம் அழகைக் கூட்டிய குப்தாவை மறந்து விட்டார்.

அறுவைச் சிகிச்சைக்காகத் தர வேண்டிய காசைக் கொடுக்காமல் கம்பி நீட்டி விட்டாராம். பலமுறை பணத்தைத் தரக் கோரி குப்தா முயன்றும் பலன் இல்லையாம்.

இதுகுறித்து அறுவைச் சிகிச்சையின்போது உடன் இருந்த சில மருத்துவமனை ஊழியர்கள் கூறுகையில், முன்னழகைக் கூட்டுவதற்கு மட்டுமல்லாமல், பிபாஷாவின் காதுகளுக்கும் அறுவைச் சிகிச்சை செய்து அழகூட்டப்பட்டது.

டாக்டர் குப்தாதான் ராக்கி சாவந்த்துக்கும் முன்னழகு அறுவைச் சிகிச்சை மேற்கொண்டார். பிபாஷா நடித்த ஜிஸ்ம் படத்துக்கு முன்பாகவே அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு விட்டது.இந்தப் படத்தில் அவரது முன்னழகு எடுப்பாக தோன்றியற்கு முக்கியக் காரணமே குப்தாதான். ஆனால் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் அவருக்குரிய ஃபீஸைக் கட்டாமல் டபாய்த்து வருகிறார் பிபாஷா. இது நியாயமே இல்லை என்று குமுறுகிறார்கள்.

தப்பாச்சே பிபாஷா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil